இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”   மன்னர்கள் ஆளுகின்ற நாட்டில் எல்லாம் – ஒருவனே ராஜா ! மக்களாட்சி செலுத்துகின்ற எனது மண்ணில் இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா ! ஆம் ! […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி

முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி முதுவைக் க‌விஞ‌ர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு இன்று 20.03.2013 புத‌ன்கிழ‌மை மாலை 6.30 ம‌ணிக்கு முதுகுள‌த்தூரில் பேத்தி பிற‌ந்துள்ள‌து. இவ‌ர‌து மூத்த‌ ம‌க‌‌ள் ந‌ஜாத் முன‌வ்வ‌ராவுக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தையாகும். இவ‌ர் குர்ஆனின் குர‌ல் மாத‌ இத‌ழில் இஸ்லாமிய‌க் குடும்ப‌ம் எனும் த‌லைப்பில் க‌ட்டுரை எழுதி வ‌ருப‌வ‌ர். இக்க‌ட்டுரைக‌ளில் சில‌ முதுகுள‌த்தூர்.காம் இணைய‌த்த‌ள‌த்தில் ம‌றுபிர‌சுர‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ‌ர‌து க‌ண‌வ‌ர் பார்த்திப‌னூர் முஹைதீன் அப்துல் காத‌ர்  ஃபைஜி ம‌லேசியாவின் சுங்கைப் […]

Read More

ம‌லேஷியாவில் முதுவைக் க‌விஞ‌ர் உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

கோலால‌ம்பூர் : ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ரும், முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்தின் த‌லைவ‌ருமான‌ முதுவைக் க‌விஞ‌ர் அல்ஹாஜ் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌ஈ அவ‌ர்க‌ளுக்கு பேர‌ன் இன்று 14.01.2012 ச‌னிக்கிழ‌மை காலை 5.00 ம‌ணிக்கு ம‌லேஷிய‌த் த‌லைந‌க‌ர் கோலால‌ம்பூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌ சுங்கைப் ப‌ட்டாணி எனும் ஊரில் பிற‌ந்துள்ளார். முதுவைக் க‌விஞ‌ர் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ரிஸ்வானுக்கு ம‌க‌ன் பிறந்துள்ளார். ரிஸ்வான் […]

Read More