மூளைச் சூடு – ஈரோடு கதிர்

கோடை ஒரு அசாதாரண சூழலைத்தான் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைத் தாங்கமுடியவில்லை என்று சொல்வது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்திருக்கலாம். இப்போது எவராலும் தாங்க முடியவில்லைதான். உண்மையில் வெயில் அத்தனை சுடுகிறதா அல்லது வெயிலை, வெக்கையைத் தாங்கும் குறைந்தபட்ச தாங்குதிறனையும் நாம் இழந்துவிட்டோமா எனத்தெரியவில்லை. கை பேசியில் பேசிக்கொள்வோரிடம் நாளுக்கு நாள் வழக்கத்திற்கு மாறாக குரல்கள் உரத்து ஒலிப்பதாக உணர்கிறேன். சட்டெனக் குரல் உயர்ந்து “நான் சொல்றத முதல்ல கேளு” என்பது போன்ற சண்டைக்கான அனுமதி நுழைவை எளிதாக வழங்கிவிடுகின்றன. நேர […]

Read More

மயிலும் குயிலும் – ஈரோடு கதிர்

  படம் : இணையத்தில் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டிருக்கியா! வெல்லம் போட்ட கச்சாயம் தின்னிருக்கியா! எங்க வீட்டுப் பக்கம் ’பிக் சிக்’ இருக்கு! எங்க வீட்ல நாட்டுக்கோழி இருக்கு! அங்கே மேரிப்ரவுன் கூட இருக்குதே! எங்க அப்பத்தா கல்லக்கா சுட்டுத்தருமே! குஷி ரைட் செமையா இருக்குமே! ஆலமரத்துல தூரி ஆடியிருக்கியா! சம்மர்க்கு தீம்பார்க் போவோமே! மொட்டக் கெணத்துல நீச்சலடிப்போமே! ஷாப்பிங் போவோம் தெரியுமா! சனிச் சந்தைக்கு போவோம் தெரியுமா! எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கு! எங்கூட்ல புதுப் பானையிருக்கு! வெஜிடபுள்ஸ்க்கு கூட ஏசி மார்ட்தான்! நாங்க காட்டுலயே பொறிச்சுக்குவோம் நூடுல்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! பழம் சக்கரை போட்ட சந்தவை ரொம்பப் பிடிக்கும்! அப்பா பீட்சா வாங்கிட்டு வருவாரே! சாணி காடை முட்டை உருண்டையில சுட்டு திம்பமே! எங்க வீட்டுல பொமரேனியன் டாக் இருக்கே! எங்க வீட்டுல ரெண்டு எருமை இருக்கே! ஸ்விம்மிங் கிளாஸ் போலாம்னு இருக்கேன் வாய்க்கால்ல […]

Read More

தாயம் -ஈரோடு கதிர்

சாணி மெழுகிய சிமெண்ட் தளத்தில் சுண்ணாம்புக் கட்டியில் கட்டங்கள் வரைந்து மலைகளுக்கு பெருக்கல் குறியிடுவாய்! உனக்கு நாலு புளியங்கொட்டை அதை நீ காய் என்பாய் எனக்கு நாலு கொட்டமுத்து.. அதை நான் நாய் என்பேன் கட்டை உருட்டிய கணமே உன் கண்கள் தாவித்தாவி கட்டங்கள் கணக்கிட்டு காய் எடுத்து வைப்பாய் என் உருட்டல்களுக்கு என் நாய்களையும் நீயே நகர்த்துவாய் நகர்த்தும் விரல்களின் சிருங்கார நடனத்தில் மட்டும் நான் லயித்திருப்பேன் ஆட்டத்தை எப்போதும் உக்கிரமாய் எடுத்துக்கொள்வாய் உனக்காக மட்டுமே ஆடுவேன் நான் உன் காய்களைக் கொண்டு என் நாய்களை வெட்டுவாய் வெட்டாட்டம் ஆடி அதிலேயும் வெறியோடு வீழ்த்துவாய் என் நாய்களை! காய்களெல்லாம் கனிய வைத்து பழம் பறிப்பாய் என் நாய்களைத் தொடர்ந்து தொடர்ந்து பட்டியில் அடைப்பாய் தொடர் வெற்றியில் சலித்துப்போய் போதும் ஆட்டமென காய்களைக் களைத்து கட்டைகளை வீசுவாய்! சலித்த தாயத்திற்குப் பதில் எப்போதாவது அஞ்சாங்கல் ஆட அழைப்பாய் அங்கும் தோற்பேனென அறிந்துமே! விரும்பி விரும்பி உன்னிடம் தோற்றது குறித்து நானும் என் நாய்களும் ஒருபோதும் கலங்கியதில்லை என்றுமே நீ தோற்றுப்போகமாட்டாய் எனும் நம்பிக்கையில் நான் தோற்றது தவிர! – நன்றி : அதீதம் — கசியும் மௌனம் www.maaruthal.blogspot.in

Read More