இலங்கும் இஸ்லாமிய இல்லறம்

  தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர் முதனிலை ஆராய்ச்சியாளர் யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம் பல்கலைக் கழகக் கல்லூரி திருவனந்தபுரம் செல் : 94950 11317   உள்ளடக்கம் 1 இல்லறம் பற்றிய இறைமறை நிறைமொழிகள் 2. இல்லறம் பற்றிய இறைநபி இன்மொழிகள் 3. திருநபியின் திருமண வாழ்த்து இறைஞ்சுதல் 4. திருமண ஒப்பந்த திருவாய் வாழ்த்து வரிகள் 5. ஆண் பெண் […]

Read More

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம் சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்      கட்டுமான அமைப்பு இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை […]

Read More

பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!

— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின் வாள் உயர்ந்த நாள் அல்ல ஏகத்துவ இறை மறுப்பின் தாள் – பூமியில் புதையுண்ட நாள்! சிறு கூட்டம் பெருங் கூட்டத்தை வெற்றி கொண்ட நாள்அல்ல! சத்தியமே வெல்லும் என்பதை முரசறைந்த நாள்! பெருங் கூட்டமாய் இருந்தாலும் அசத்தியம் தோல்வியுறும் என்று அறிவித்த நாள்! சிற்றெறும்புகள் சேர்ந்து மத […]

Read More

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். […]

Read More

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

  ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )   இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் […]

Read More

நிக்காஹ் குத்பா

  (இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன், அவனிடமே உதவி தேடுகிறேன், அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனையே விசுவாசிக்கிறேன், அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்கிறேன். அந்த அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவனை யாரும் வழி கெடுக்க […]

Read More

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அல்ஹம்து லில்லாஹ் ….   சொல்வதற்கு இயல்பான […]

Read More

பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். […]

Read More

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர். தமிழகத்திற்கு மூன்றாம் இடமே ! இப்பக்கங்களில் ‘மயில்’ வாசகர்களுக்காக ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இணைய’த்தை வெளிச்சமிடுகிறார் கலாபூஷணம் இலங்கைத் தமிழ்மணி […]

Read More

அன்பே ………………….

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை ! மு.கதிஜத்துல் சாரா அமீரா – சென்னை அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது. அறிவுக் கருவூலமாய், அருள் சுரக்கும் பெட்டகமாய், அன்பார்ந்த கட்டளையாய், வழிபட்டோருக்கு நற்செய்தியாய், வழிதவறியவருக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாய், […]

Read More