கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Read More

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள் தான் !   ஆனால்… அந்த வலி …. யாருக்கு ..?   அதைச் செய்தானே குயவன் அவனுக்குத்தான் ! எந்த ஊர் மண்ணெடுத்து எப்படிச் செய்தானோ…? […]

Read More

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்     ”மகனே..? இனிய மைந்தா! மூன்று மாதத்தில் வளர்ந்த போது வயிற்றில் மிதித்தாய்… தாங்கிக் கொண்டேன். இன்று… இருபத்து மூன்று வயதில் இதயத்தில் அல்லவா மிதித்து விட்டாய்..!”   ”மண்ணில் புரளும் புழுவுக்குள்ள மதிப்புகூட உன்னை ஈன்ற எனக்கில்லாமல் போனது.”   அன்று நீ பேசிய மழலைச்சொல் – எனக்குத் தேனாக இனித்தது… இன்று நீ ஏசும் மொழிகள் தேளாய் கொட்டுகிறது.!   என் பாசம் கூட […]

Read More

இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை

தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க மழை தருகிறது? அது போல இளையான்குடியைச் செழிக்க வைக்க வந்தவர்கள் என்று கூட நாம் இவர்களைச் சொல்லலாம். இவர்களின் பெருமைகள், அருமைகள் எல்லாம் வரும் அத்தியாயங்களில் மின்னிடக் […]

Read More

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம் செய்து, எழில்பள்ளி யாக எதிர்நின்ற தாமோ? சீரெல்லாம் சேர்ந்து சிங்காரம் செய்து ஓரிறைப் பள்ளியாய் உருவான தாமோ? வனப்பெல்லாம் திரண்டு வளம்மிகப் பெற்று, தினந்தொழும் பள்ளியாய்த் திகழ்கின்ற […]

Read More

துபாயில் இளையான்குடி ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23  மார்ச்  வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது நாசர் தொகுத்து வழங்கினார். நெய்னாப்பிள்ளை. பரிது வரவேற்புரை நிகழ்த்தி வந்தவர்களை வரவேற்றார். ரப்பர் காசிம். நூருல் அமீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி தந்தார். அவர் தம் தலைமை உரையில் கூறும் போது கடந்த 1980 வருடம் முதல் துபாயில் வசிப்பதாகவும் இது போன்ற ஊர் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். ரசூலுல்லாஹ் (ஸல்) […]

Read More