இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர். தமிழகத்திற்கு மூன்றாம் இடமே ! இப்பக்கங்களில் ‘மயில்’ வாசகர்களுக்காக ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இணைய’த்தை வெளிச்சமிடுகிறார் கலாபூஷணம் இலங்கைத் தமிழ்மணி […]

Read More

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே …

  ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம்  என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே  மனதில்தான் உருவாகின்றன. மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் “விதைப்பதே விளையும்” என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை […]

Read More

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக மக்களைச் சென்றடைகிறது. Informative essay செய்தி விரிவாக்கம் எனக் கட்டுரையைக் கூறுவர். நிகழ்கால மக்கள் பிரச்சனைகள், தேவைகள், கலாச்சாரம், உடை, உணவு, வேலைவாய்ப்பு, திருமணம், விவாகரத்து, குடியமர்வுச் சிக்கல், தேய்ந்து வரும் ஒழுக்கம், கரைந்தோடிய […]

Read More

மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா

‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வானமே எல்லை. பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வாய்ப்புகளும் அதிகம். வெளிநாட்டு மொழிகளைப் படித்த மாணவர்களுக்கு சுற்றுலாத் துறை, பொழுதுபோக்குத் துறை, ஊடகங்கள், மக்கள் தொடர்புத் துறை மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்காகவே இன்றைய மாணவர்கள் […]

Read More

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற […]

Read More

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாடு அக்டோபர் 02, 2011, தென்காசி மாநாட்டுத் தீர்மானங்கள் 1. இறையருளால்… இஸ்லாமிய இலக்கியத் கழகத்தின் சார்பில் வருங்கால இலக்கியப் படைப்பாளர்களை வளர்தெடுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 13, அக்டோபர் 1 ஆகிய தினங்களில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘படைப்பிலக்கியப் பயிலரங்கு’ போல், இனி தொடர்ந்து பல்துறை சார்ந்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் இலக்கிய நிகழ்வுககள் நடத்தப்படும். 2. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்களைச் சமுதாயத்தில் அதிகப்படுத்துவதற்கான முயற்சியாக, அவர்கள் தம் படைப்புகள் […]

Read More

முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.        கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப வெற்றிகரமாக நடைபெற்று,வரலாறு படைத்தவைதாம். எனினும் அவற்றிற்கிடையிலான தொடர்பு மணிகளைக் கோக்கும் நூல் போன்றதாகும்.இந்த மாநாட்டின் கருப்பொருள் கடந்த காலப் பணிகளுக்கு அணி சேர்ப்பதாகவும் நிகழ்கால நீரோட்டத்தில் நம் […]

Read More

முத்துப்பேட்டை ”தமிழ் மாமணியுடன்” ஒரு நேர் காணல்..

முத்துப்பேட்டை ஹெச்.எம்.ஆர் என்று அழைக்கப்படும் மற்றும் தமிழ் மாமணி விருது பெற்றவருமான ஜனாப்.ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களை முத்துப்பேட்டை.காம் இணையத்தளத்திற்காக நேர் காணல் செய்தோம். 8.7.1936 ல் பிறந்த இவர் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர், மேடை நாடகம், பேச்சுத்திறன் ஆகிய திறமைகள் தன்னகத்தே கொண்டவர். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகி, தாளாளர், மற்றும் பள்ளியின் முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்தது. எம்.ஏ […]

Read More

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்! ஏ.ஸி. அகார் முஹம்மத்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள […]

Read More