ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே […]

Read More

புறநானூற்று அறிவியல் வளம்

      அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில் […]

Read More

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம் – புதிய கட்டுரை அறிவிப்பு மடல்   தனி மரம் தோப்பாகுமா ? ஆகும் அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது……   மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.   அடுத்த […]

Read More

அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)

சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல்  போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும் http://siruvarariviyaltamilmandram.blogspot.in/2013/07/blog-post.html பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10 45 3 44 என்னும் கைப்பேசி எண்ணிற்கு  செய்தியாக அனுப்பவும். விளையாட்டு என்ன ? பதில் உங்களுக்கு தெரியுமானால் , உடனே பதிலை எழுதக்கூடாது பதிலை சென்றடையும் வழிமுறையை எழுத […]

Read More

தமிழில் அறிவியல் படித்தால் ..!

  க. சுதாகர்   “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை ஏற்று உறுதிப்படுத்தி வந்த கட்டுரை இது. அன்பின் நடராஜன் ! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் படிப்பதில் புரிதல் எளிதாகியிருந்தது. நான் தமிழ்ப் பள்ளியில் பயின்றவன். பத்தாம் வகுப்பு […]

Read More

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம் “மழை பெய்யாதா?” என்ற ஏக்கத்தோடு வானை ஏறிட்டு நோக்கி புலம்பும் கூட்டம் மறுபுறம். இப்படி கோடைவெயில் கடுமையாக அடித்தாலும், இதற்கான மாற்று வழியை நாம் சிந்திப்பதில்லை. கட்டார் […]

Read More

நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு ! ( முனைவர் மு. சீனிவாசன் )

  ( கட்டுரையாளர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலுள்ள இந்திய மருத்துவ உயர் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இன்றைய உலகில் நானோ தொழில்நுட்பம் என்பது பிரபலமடைந்து வரும் சொல்லாகும். அது என்ன நானோ தொழில் நுட்பம் ? அதனை எளிமையான முறையில் விளக்குகிறார் கட்டுரையாளர் )  உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எனும் வாய்ச்சொல் வார்த்தை களால் தமிழையோ தமிழரையோ வாழ வைக்க இயலாததன் காரணம், நம் மொழியானது கருத்தை பரிமாறும் ஊடகமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. […]

Read More