முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு புதிய க்லலூரிகள் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடடுள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலும், கடலாடியிலும் அரசு புதிய கல்லூரிகள் துவங்கப்டுகின்றன. இவ்விரு கல்லூரிகளும் ஜூலை.27 முதல் துவங்கப்பட […]

Read More

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட […]

Read More

நல்லது நடந்தால் சரி…

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக “சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு’ எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது. மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று […]

Read More

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

முதுகுளத்தூர், : ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல், வேளாண்மைதுறை, மீன் வளத்துறை, கலை மற்றும் அறிவியல்துறை, பாலிடெக்னிக் கேட்டரிங், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு வகையான மேற்படிப்புகள் தேர்வு செய்யும் வழி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டன. ரிலையன்ஸ் அறக்கட்டளை செந்தில்குமரன், சுந்தரவேல், கிங்க்ஸ் […]

Read More

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Read More

திருச்சி ட‌வுண் காஜிக்கு பேர‌ன்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ மௌல‌வி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழ‌ந்தை திருச்சியில் பிற‌ந்துள்ள‌து. ஜே. ஷம்சுதீன் பாஷா தொட‌ர்பு எண் : 9788 785 786 மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் : 98 424 77862 த‌க‌வல் உத‌வி : ஏ. அஹம‌து இம்தாதுல்லாஹ் துணைத் த‌லைவ‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More

ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு

ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு:ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு சென்னை, பிப்.29- ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேலும் ஒருமாதம் கால அவகாசம் ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் […]

Read More

கலப்பு திருமணம், விதவை மறுமண நிதியுதவி பெற அரசு நிபந்தனை விதிப்பு

நெல்லை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைய தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பொது பிரிவின் கீழ் பயன் பெற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் […]

Read More