தியாகமே ஹிஜ்ரத்
(முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ) ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் ! தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் ! இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் ! மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு […]
Read More