வெயிலெரிக்கும் வெக்கை

பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள் ஒருவழியாய் மரியம்மாவை நம்பிக்கொண்டிருந்தவள்மண்ணெண்ணெயிலெரிந்த மகளைகண்ணீராலணைத்து தோற்றாள் கடவுளெல்லாம் கைவிரித்த பின்அவள் நம்பியிருப்பதெல்லாம்கன்றிழந்த ஒரு பசுவையும்காலுடைந்த வெள்ளாட்டையும் தான் ….நிகழ்பாரதி

Read More