உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்..

1 உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் […]

Read More

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து பயந்து பரிட்சையெழுதிய அதே படபடப்பு, தேவையற்றதை வேறு வழியின்றி மனப்பாடம் செய்ததைப் போன்ற வேறு வழியற்ற அதே வாழ்க்கை, இன்னும் […]

Read More

அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது; வெறும் அழைக்கவும் அழைக்கையில் இருக்கேன்பா என்று சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்; அம்மாவை அழைத்த நாளும் அவள் […]

Read More

வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

www.vidhyasaagar.com   1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு தேவையா என்று நினைப்பேன் வெயிலில் வற்றிப்போன குளம்போல – இப்போதெல்லாம் உயிர்ப்பிற்கான நாட்களை மாத்திரைகள் தின்று வருகின்றன […]

Read More