சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது […]

Read More

ரயில் பயணங்களில்

அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில் இடறி நடப்பவர்கள் இடைவிடாது விதைக்கிறார்கள் மன்னிப்பை. காலை ரயிலில் சாப்பிடுபவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு ஊட்டுகிறார்கள் பசியை எல்லாப் பயணங்களோடும் ஓடும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் ஏதாவதொரு குழந்தை மறக்கவைக்கிறது வயதை. – ஈரோடு கதிர்

Read More