வானொலி உரை

மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு அகிலத்தை ஆளுகின்ற வல்லவனே அல்லாஹ் ! உன்பெயர் தொட்டு இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! (வானொளி ஆறின் அன்பு நெஞ்சங்களே!!) கருணைக் கடலான காவலன் அல்லாஹ்வின் சிறப்பு மிகு சாந்தியும் சீர்மிகு சமாதானமும் நம் அனைவர்மீதும் நின்றிலங்கப் பிரார்த்திக்கிறேன் ! புனிதமும் புண்ணியமும் […]

Read More

சென்றுவா ரமலானே

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால் உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா         யாப்பிலக்கணம்: இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com […]

Read More

புனித ரமலான் வருக! வருகவே!!

அருமறையின் அடிச்சுவட்டில் அகமெங்கும் அர்ப்பணித்து ஆண்டவனின் தாள்பணிந்து அகிலத்தோர் வாழ்தலெனும் பெருமைமிகு நபிகளவர் செப்பிய வழிநடக்கும் முகமதியர் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் விரதமன்றோ? தருவதிலே உள்ள இன்பம் தரணியெங்கும் தான் பரவ ஈதல்செய்து உவக்கும் இஸ்லாமிய மார்க்கமதில் நோன்பதன் மாண்பதனை முப்பது நாட்கள் கண்டு ஊன் உயிர் யாவையும் ஒன்றெனப் போற்றிடும் ஆன்மீகப் பாதையில் ஆண்டவன் அருள்பெறவே ஓங்கிய வழி நடக்கும் உத்தமர்கள் வாழியவே! புனிதமெனக் கருதப்படும் ரமலானே வருக! வருக!! மனிதரெலாம் இணைந்து வாழ மறையோனின் அருள்பொழிக!! […]

Read More

அமலால் நிறையும் ரமலான்

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்          படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்           கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்           பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம் வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்           வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்     குடலுக்கு மோய்வாக்கி […]

Read More