துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்
துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பர்வீன் பானு, ஜாபர் அலி உள்ளிட்ட ரசமாயி நிர்வாகக்குழுவினர் செய்திருந்தினர்.
Read More