முதுகுளத்தூரில் அபாய மின்கம்பங்களால் பீதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சாய்ந்து விழ காத்திருக்கும் மின்கம்பங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.முதுகுளத்தூர் கொன்னையடி விநாயகர் கோயில் தெரு, வடக்கூர், மு.தூரி, காந்திசிலை, அரப்போது, கீழச்சிறுபோது உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. அதிகமான மின் இணைப்புகள் கொண்ட கொன்னையடி விநாயகர் கோயில் தெருவிலுள்ள மின்கம்பத்தின் அடியில், எவ்வித பிடிமானமும் இல்லாததால், இப்பகுதியினர் சிமென்ட் பூசி பாதுகாத்து வருகின்றனர்.இப்பகுதி பாலையன் கூறுகையில், “”முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் […]

Read More

முதுகுளத்தூரில் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியனின் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா, முதுகுளத்தூரில் இந்தியன் ஆயில் தென் மண்டல தலைமை விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. பரமக்குடி நகர தலைவர் கீர்த்திகா குத்துவிளக்கேற்றினார். சாத்தூர் எம்.எல்.ஏ., உதயகுமார், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கினர். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), அசோக்குமார் (ராமநாதபுரம்), முன்னாள் அமைச்சர் […]

Read More

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

  முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா

Read More

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது. மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. […]

Read More

2,000 ஏக்கர் பருத்தி பாதிப்பு தத்தளிக்கும் முதுகுளத்தூர் விவசாயிகள்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில், போதிய மழையின்றி, 2,000 ஏக்கர் பருத்தி விவசாயம் பாதிக்கபட்டு, விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர். பருவமழை பொய்ப்பால் நெல், மிளகாய் சாகுபடியில் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி முதுகுளத்தூர், ஆணைசேரி, கீழத்தூவல், காக்கூர், புளியங்குடி, பொன்னக்கனேரி, தாழியரேந்தல், உலையூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்தனர். தொடர்ந்து மழையின்றி மகசூல் கிடைக்கும் பருவத்தில் பருத்தி […]

Read More

முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ் குறுகிய ரோடால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. தற்போது மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் எதிரேதிரே செல்ல முடியாமல், ஒரு கி.மீ., தூரம் பின்நோக்கி வந்து ஒதுங்கிய பின்னரே எதிரே வரும் வாகனம் செல்ல முடியும்.இதனால் பயண நேரம், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது.இப்பிரச்னையால் வாடகை […]

Read More

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட […]

Read More

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் முஹம்மது சுலைமான், உதவித் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விக்குழுவினர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் […]

Read More

முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!

  ( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே ! புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே, புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !   அருமகனார் நிஜாமுத்தீன் ஆலிமவர் தலைமையிலே, ஐக்கியமாய் வாழுகின்ற அமீரகத்துத் தோழர்களே ! வருங்காலம் வாழ்த்துகிற புதுவுலகம் உங்களுக்கே ! வளமான வாழ்வுகளும் வாழ்த்துகளும் உங்களுக்கே !   […]

Read More

நிலம் பதிவு செய்தும் பத்திரங்கள் பெற முதுகுளத்தூரில் காத்திருப்புஆபிஸ் மாற்றம் பயனாளிகள் அவதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு அலுவலகம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில், செயல்பட்டு வந்தது. மழை காலங்களில், பதிவேடுகள் அழியும் அபாயம் குறித்து, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன்காரணமாக, முதுகுளத்தூர் பத்திரபதிவு அலுவலகம் இடிக்கப்பட்டு, புது அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக, வாடகை கட்டடத்தில், பத்திரப்பதிவு அலுவலகம், […]

Read More