மழையின் மடியில்

கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை  மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்!   சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்!   மழையே குளிர் மழையே இயற்கையனைத்தும் உன்மடியில் மழையே வான் மழையே மயங்கும் மனமும் மனித உடலும் மழைத்துளியின் அன்புப் பிடியில்   மழையே அருள் மழையே மாபெரும் அருளாளன் மனமுவந்து அளித்த மாமழையே வா வா வெகு அழகாய் நலமாகுமே இவ்வுலகம்  உன் வரவால்!……….     பள்ளிக்கூட நியாபங்களையும், பருவத்தையும் எட்டிஎட்டி தொட்டுநின்றகாலம்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டு சூரிய ஒளியைகடன்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலாக்கால இரவொன்றில், வீட்டினுள்கவ்விய இருளின் பயத்தை விரட்ட முற்றத்தில் வந்தமர்ந்துமுழங்காலைகட்டிகொண்டு வானை வேடிக்கை பார்க்கையில்,இருளைகளைய முற்பட்ட மின்மினிகளின் வெளிச்சத்தை விரட்ட எண்ணி, திடீரெனமின்னல் மின்னி, இடி இடித்து துளித்துளியாய் கொட்டியதூறல்கள்,என்தேகம் தொட்டு விளையாட,சட சடவென பெருமழையாய்பெய்யத்தொடங்கியதும், மண்வாசம் மூக்கைத்துளைத்தபடி கண்களைகிறங்கடிக்க, இருந்த இடத்திலிருந்து எழாமல் நனைந்துகொண்டே இருந்தஎனக்குள் மின்னல்கீற்றாய் சிலவரிகள் மின்னி மின்னி இதயத்தை இடித்தன.   இதயத்தில் இதமாய் இடித்த எண்ணங்களை எழுத்துக்களாக்கமுயற்சித்ததின் விளைவு, சின்ன சின்னதாய் கிறுக்கிகொண்டிருந்த நான்முதல் முறையாக எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமைப்படுத்தும்விதமாய், முழுக்கிறுக்களாய் உருப்பெற்று என் பள்ளி நோட்டில்  முளைத்தது முதல்கவிதை இந்த மழைக்கவிதை, ஆர்வமிகுதியால்சிலகிறுக்கல்களை சில இதழ்களுக்கு அனுப்பியபோதும் வெளிவராமல்போகவே, அலுச்சாட்டியம் செய்து அடுக்கடுக்காய் நிறைத்தனநோட்டையும், டைரியென்னும் நாட்குறிப்பையும், விடாமுயற்சியாய்அவ்வபோது மீண்டும் மீண்டும் பெயர்மாற்றி அனுப்பியதில் ஓரிருகவிதைகள் வெளிவந்தது, வெளிவந்த முதல் கவிதையும் 8வரி ”மழை”க்கவிதை ”மரியா” என்ற பெயரில் பதினைந்து வயதில் பதியமிட்டவிதைகள்பல ஆண்டுகள் கடந்து 2009 தில், பாலைதேசத்தில், இணையத்தில் வழியாகபூத்தன பலகிறுக்கல்கள் மலர்கள், அதன்வழியே வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழில் முளைத்தது என் மனவிதைகள் மணமணக்கும் தமிழ்பூவாய். அதனிலிருந்து தொடர்ந்து விதைகிறேன் க”விதை”களை. மண்ணில் விழும் விதைகள்யாவும் முளைத்து எழுவதில்லை, அதுபோல்விழும் விதைகளில் ஒரு விதையேனும் மண்ணை முட்டி முளைத்துப்பூக்காமல் இருப்பதுமில்லை. வான்மழை பூமியை நனைத்து மண்ணுக்குள்நுழைவதுபோல், என்மன உணர்வுகள், பிறரின் மனங்களைத்தொட்டுஉணர்வுகளுக்குள்ளும் நுழைய, தூவிக்கொண்டேயிருப்பேன் கவிதைமலர்களை..     அன்புடன் மலிக்கா  

Read More

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க வைக்கின்றேன் உதிருகின்ற உன் கண்ணீர்-என் உள்ளத்ததை உருக்கும்போது ஆறுதலாய் அணைப்பதைத் தவிர அன்னமேயெனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை காதல்பூ வாடி நிற்க கடல் கடக்க துணிகின்றேன் காகிதக்காசை கைப்பற்ற கண்மணியே உனைபிரிந்து கானகம் செல்லப் போகின்றேன் கரையாதே காதல் சகியே! காற்றில் தூது விடுகின்றேன்- அது காதோடு காதல் […]

Read More

இறவா நட்பு

  நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு   இப்படியான நட்பு இல்லாமையிலும் இயலாமையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இன்னலிலும் இடைஞ்சலிலும் எதற்கும் கலங்கவிடாது எள்ளளவும் களங்கிவிடாது என்றென்றும் உயிர்த்திருக்கும் என்றுமே! இறவாமல் நிலைத்திருக்கும்…   அன்புடன் மலிக்கா துபை http://niroodai.blogspot.com

Read More

ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/  இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கும். எங்களின் மனார்ந்த நன்றிகள்.. அன்புடன் மலிக்காஃபாரூக்

Read More