ஒரு சொல் போகும் நேரம்..
எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் நான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று போகப்போகிறது; எனைவிட்டு இம்மியளவு பிரிந்ததில்லை வேறு யாருக்கென்றும் பிறக்கவில்லை எனக்காகவே பிறந்ததின்று போகப்போகிறது; […]
Read More