துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை கிரீக் பூங்கா அரங்கில் சிறப்புற நடைபெற்றது. ஆடவர் தினத்திற்கு துபாய் தமிழ்ச் சங்க துணைத்தலைவரும், நிறுவனப் புரவலருமான ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் பிரசன்னா மற்றும் பொருளாளர் கீதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை – ஃபர்கான், வினேஷ், சஜிந்த், அர்ஜீன், விபிஷ், சிரிஷ் ஆகியோர் பாடினர். திருக்குறளை வசந்த் வாசித்தார். […]

Read More

துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் […]

Read More

துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30 வ‌து ஆண்டு விழா

துபாய்: துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30வ‌து ஆண்டு விழா ஏப்ர‌ல் 26 ம‌ற்றும் 27 ஆகிய‌ இரு தேதிகளில் துபாய் ஆண்க‌ள் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து. இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துபாய் கிளை தலைவர் எஸ். வெங்கடேஷ் தனது துவக்கவுரையில் 30வது ஆண்டு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற தங்களது உழைப்பினை நல்கிய அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். சிபிடி படிப்புக்கு துபாய் மற்றும் வடக்கு அமீரகத்திலிருந்து […]

Read More

துபாயில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்

துபாய்:  துபாயில் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் கடந்த 27ம் தேதி காலை அட்லாண்டிஸ் ஹோட்டல் அருகே நடைபெற்றது. இந்த ஓட்டம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் சைக்கிகள்கள், செல்லப் பிராணிகளுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடையை அமீரகத்தில் புற்றுநோய் குறி்த்த ஆராய்ச்சி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் […]

Read More

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் பாஜில் பாக‌வி ‘அனைத்து துறைக‌ளிலும் ஆன்மீக‌ம்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த […]

Read More

துபாயில் உத்சவ் பாட்டுக்குப் பாட்டு போட்டி

துபாய் : துபாயில் உத்சவ் 2011 எனும் பாட்டுக்கு பாட்டு போட்டி கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிக்கான தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை அல் கூஸ் ஷாப்பிங் மாலில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது ( ETA Dial a Car ) மற்றும் முஹம்மது சாமும் ( ETA MELCO ) ஆகியோரும் அடங்குவர் என்பது […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து. ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌லைமையில் […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012

துபாய் : துபாயில் ரேடியோ ஹ‌லோவுட‌ன் இணைந்து ஸ்மைல் ஈவெண்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்வினை 30.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து. மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்வின் துவ‌க்க‌ச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இறுதிப்போட்டியில் 15 பேர் ப‌ங்கேற்று அவ‌ர்க‌ளில் ஐந்து சிற‌ந்த‌ […]

Read More

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை துபாய் : துபாயில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மூத்த மகன் அமீனுக்கு இன்று 15.03.2012 வியாழக்கிழமை காலை துபாய் அல் பரஹா மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை ( ஆண் மற்றும் பெண் ) பிறந்துள்ளது. அமீன் தொடர்பு எண் : 050 312 62 18

Read More

துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை ஈடிஏ ஸ்டார் ஹ‌வுஸ் ஆடிட்டோரிய‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து.. அத‌னைத் தொட‌ர்ந்து ப‌ள்ளிப்ப‌ண் பாட‌ப்ப‌ட்ட‌து. சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஆரிஃப் ர‌ஹ்மான் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி என‌து ப‌டிப்பின் கார‌ண‌மாக‌வே உருவான‌தாக‌ த‌ன‌து த‌ந்தை கூறிய‌ ப‌ழைய‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். முன்னாள் […]

Read More