செல்வச் சுத்திகரிப்பு

திருமலர் மீரான்   பூலோக நாடுகளின் பொருளாதாரப்பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படைத்தவன் வீசிய பெரு நிவாரணப் பொருள் பொதியே ஜக்காத் ! சமூகச் செயல்பாட்டிற்கு சர்வலோக அதிபதியின் சத்தான பொருள் திட்டம் !   ஏழைகள் மேம்பாடுற ஏக இறை வகுத்த கட்டாய தானத்தின் கணக்குத் திட்டம் !   கரன்சியில் சேரும் கசடு நீக்கும் செல்வச் சுத்திகரிப்பு சிறப்புத் திட்டம் !   ஆகுமான வருவாயில் ஆகாதவை நீக்கும் மாமறை வழிவந்த மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் ! […]

Read More

முகவரி தேடும் மார்க்கப் பயணம்

  திருமலர் மீரான்   மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள் வரம் தேடுகின்ற வெற்றிப் பயணம் ..!   அரபாத் அன்னையின் அருள் பால் அருந்த அனைத்து நாட்டு அருமாந்தப் பிள்ளைகள் அணிவகுக்கின்றன !   மக்கா மதீனா மணல் தொட்டில்களில் அயல்நாட்டு சிசுக்கள் ஆன்மீக மயக்கத்தில் அயர்ந்து உறங்கும் !   வயதான முதியோரும் வாலிபர் இளைஞர்களும் வயதையே […]

Read More

திருமலர் மீரான் கவிதைகள்

    மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் !   பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில் வெள்ளையானது   அடி (த்) தட்டு அடித்தட்டு ஆடு, மாடு, மான்கள் சிங்கம், புலிகளை அடித்துக் கொன்று ஏப்பம் விட்டன !   தலைக்கனம் உதையின் வேகத்தில் உயரே பறந்ததும் கீழே கிடந்த பந்தினை இளக்காரமாகப் பார்க்க தலைக் கனத்தால் தரையில் விழுந்தது !   தலைகீழ் திரை […]

Read More

பிரியாவிடை

  திருமலர் மீரான்   இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே !   அன்றொரு நாள் புனித இரவில் அர்ஷிலிருந்து வஹிக் குழந்தைகளை தெளஹீதின் தென்றலில் தாலாட்டி தாஹா நபியிடம் தந்த மாதத்தாயே !   உனது வருகைக்குப் பிறகே படித்துறைகள் காணாத எங்கள் செல்லப் பிள்ளைகள் வேதம் படித்தன ! செல்வப் பிள்ளைகள் ஜக்காத்தென்னும் ஞான ஸ்நான துறைகள் கண்டன !! […]

Read More

விறகாய் எரியும் வீணைகள் !

  _ திருமலர் மீரான் –   இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !   அன்று முல்லை படர தேரையே கொடுத்தான் அவன் பாரி ! இன்று பூவை படர ஏக்கர் லாக்கர் குக்கர் கார் ரெப்ரிஜிரேட்டர் என ஊரையே கேட்கிறான் இவனோ விய பாரி !   மயிர் உதிர்ந்ததற்காக மானம் போனதாக உயிர் விட்ட மான்கள் காட்டில் வாழ்ந்தன ! […]

Read More