திருக்குறள்

உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம். நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர். விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது. திருக்குறளில் ஏழு என்ற […]

Read More

திருக்குறள் தேசீய நூல்!

நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று கூட்டுமோர் இனிய  வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும் காட் டுமோர் வழியில் சென்றால்  கலகங்கள் ஏதும் இல்லை ஓட்டைகள் உடைசல் இல்லா தேசியத் தலைநூல் அன்றோ? கல்வியின் சிறப்பைப் பாடும்  கருணையின் நிலையைக் கூறும் செல்வனின் இயல்பைக் காட்டும் சிறியரை விலக்கச் செய்யும் நல்லவை எல்லாம் நாட்டும் நலிந்தவை எல்லாம் ஓட்டும் சொல்பொருள் விளக்கிப் பேசும் சுகப்பொருள்  என்னவென்பேன்? சாற்றிடும் ஞானம் யாவும் சத்தியம் ஆகிக் காணும் போற்றிடும் வழிகள் யாவும் புண்ணிய […]

Read More

திருக்குறள் தேசிய நூல்

  ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு  நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே!         அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து .. […]

Read More

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள் ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ? அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்!   தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு ஓராயிரம் புலவர் இங்கே தோன்றிடலாம்! ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக – தமிழ் வாழ்ந்ததற்கு அடையாளம் திருக்குறளே!!   உலகமெங்கும் பரவிநிற்கும் நூலிது என்பதை உணர்ந்தவன் வள்ளுவன் எனலாமா? உலகவாழ்வின் சூத்திரங்கள் சுருங்கச்சொல்லி பொருள்நிறைந்த பொக்கிஷத்தைப் படைத்தாரே!   எந்தவொரு நாட்டினர்க்கும் பொதுவாக எழுதுவது அப்படியொன்றும் எளிதில்லை! எடுத்தியம்பும் கருத்தெல்லாம் […]

Read More

திருக்குறள் தேசிய மாநாடு

கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள் கவிதையை அனுப்பவும்… அனுமதி இலவசம்! அனுப்பவேண்டிய முகவரி: ezuttholai@gmail.com அல்லது, க.ச.கலையரசன், கவிஞன் குரல் பதிப்பகம் எண்:1 நேரு நகர், மன்னுர்ப்பேட்டை, சென்னை – 600050. விதிமுறைகள்: கடைசிநாள்: 15.05.2013 அனுப்பும் கவிஞரின் முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் மறக்காமல், மறுக்காமல் குறிப்பிடவும்.. எழுத்தோலை […]

Read More

திருக்குறளே தேசிய நூல்

    பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார்.   திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர் இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான் பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும் குறுக்கிப் புகுத்தியசெம் பா.   இல்லாத தொன்றில்லை இப்புவியோர் என்றென்றும் நல்வழியில் பாதம் நிலைநிறுத்த – வெல்லாச்சொல் கோத்தளித்தார் வள்ளுவனார் கோனானார் ஊழிவரை பாத்தமிழ் செய்வாருள் தான்.   பன்மொழிகள் தம்வசமாய்ப் […]

Read More

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், […]

Read More

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.   இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது. […]

Read More