துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப‌ தின‌ விழா ‘கலக்கல் குடும்பம் – 2012’ எனும் பெய‌ரில் கிரீக் பார்க், குழ‌ந்தைக‌ள் ந‌க‌ர‌ அர‌ங்கில் 08.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ அமீரக தேசிய கீதம் ம‌ற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தினை துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்க‌ளின் குழந்தைகள் உற்சாக‌த்துட‌ன் பாடின‌ர். திருக்குறளை செல்வன். விஜயேந்திரன் அத‌ன் விரிவுரையுட‌ன் வ‌ழ‌ங்க‌ இன்று ஒரு தகவல் மூல‌ம் குடும்ப‌ உற‌வுக‌ள் குறித்து செல்வி. ஜனனி […]

Read More

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடியது. ஜித்தா வாழ் தமிழர்கள் திரண்டு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாட ‘சித்திரை கொண்டாட்டத்தில்’ கலந்து கொண்டனர். நிகழ்ச்சிநிரல் ஒருங்கிணைப்பாளர் திரு விஜயேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  குழந்தைகள் நடனம், பாடல், நாடகம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றில்  தங்கள் திறன்களை காண்பித்தனர். […]

Read More

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற […]

Read More

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, கலையன்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். […]

Read More

இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!

ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும். சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும். ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை இருந்தது என்பது பைபிளின் கொள்கையாகும். சிருஷ்டித்த உமது இறைவன் பெயரால் நீர் ஓதுவீராக ! (இறைவனாகிய) அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து தான் (நபியே) நீர் ஓதும். […]

Read More

நற்குணங்களை வலியுறுத்தும் பயான்களின் தொகுப்பு…. (MP3)

click on this link http://www.tamilislamicaudio.com/kw_character.asp   இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”  அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத வாழ்விலிருந்தும் அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பாடங்கள் பயில்வோகமாக. இத்தகைய நற்குணங்களை நமது வாழ்க்கையில் பின்பற்றி இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்போம். ஈருலக வெற்றிபெருவோம்.   […]

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! . உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

Read More

தமிழின் பொற்காலம்

தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. ” வண்ணமும் கண்ணமும்” என்ற இந்த இரண்டு […]

Read More