மகரிஷி கவியோகி

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   பன்மொழிப் புலமை, தமிழ்க்கவிதை, நாடகம், புனைகதை, இலக்கிய விளக்கம், வாழ்க்கை வரலாறு, கல்வி, அறிவியல், ஆன்மீகம், இதழியல் எனப்பல துறைகளில் சாதனை படைத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மொழிபெயர்ப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவர்” என்னும் பெருமையும் இவருக்குண்டு. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டக் கூடியதும் தொழில் சார்ந்ததுமான செய்முறைக் கல்விக் கொள்கையை வகுத்துத் தந்தவர் சுத்தானந்தர். அக்கல்வி தாய்மொழி வாயிலாகவே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். இவரின் […]

Read More

’மணிக்கொடி’யைப் பதிவு செய்தவர்’

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   ’கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை’ என்றார் ஒளவை. ராமையாவிற்குப் பிறப்பிலிருந்தே வறுமை பிடித்துக் கொண்டிருந்தது. தாய், தந்தை, உடன் பிறந்தோர் ஐவர் எனக் குடும்பம் பெரிதாக இருந்தது. அண்ணன்மார் நால்வரும் படிக்கவில்லை. படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் சிறுவன் ராமையாவுக்கு மட்டும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வத்தலக்குண்டில் இருந்த ஜில்லா போர்டு நடிநிலைப்பள்ளியில் மூன்றாம் பாரம் […]

Read More

கவிக்குயில் சரோஜினி தேவி

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )     வங்காள தேசத்தில் உள்ள பிரம்ம நகரில் அகோரநாத் – வரதசுந்தரி தம்பதியர்க்கு 1879 பிப்ரவரி 13 ல் மூத்த மகளாகப் பிறந்தார் சரோஜினி தேவி. தமது 12 வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார். இளம் வயது முதலே கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார். சர்வால்டர் ஸ்காட் எனும் ஆங்கிலக் கவிஞரின் அடியொற்றி ஆங்கிலக் கவிதைகள் புனைந்தார். சரோஜினியின் ஆங்கிலக் […]

Read More

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் நாட்டு மக்கள் அனைவராலும் ‘நாட்டாரையா’ என அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்பெற்றவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார். தமிழன்பர்களின் நெஞ்சங்களில் நின்ற சொல்லராய், நீடு தோன்றினியராய் வாழ்ந்து வரும் நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஏப்ரல் 12-ல் முத்துசாமி நாட்டார் என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார். தம்முடைய […]

Read More

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   மிகச்சிறந்த பேராசிரியராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை, திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 மார்ச் 2 அன்று பிறந்தார். பிறவிப்பெருமாள் – சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார். அக்கால வழக்கப்படி சேதுப்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் பின்னர் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 1915 ம் ஆண்டு […]

Read More