சுனாமி

என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள – நீளுமொரு கூட்டம் அங்கே கண்டிருக்கிறேன் அந்தோ….. ஓலங்கள் ………மரண ஓலங்கள் உன்னை சபித்துக்கொண்டிரும் மனித உள்ளங்கள் புரியாத பெயர் சொல்லி -விளையாடும் உன் விளையாட்டின் விலை  – ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரோ? அசுரமாய் ஆர்ப்பரித்த  அலையால் – உன் கொடூர வலையால் – உன் மடியெங்கும் எங்கள் மனித உயிர்கள் என் மனம் கனத்திருக்கிறது……….…….! புதுசுரபி 

Read More

ஜப்பானில் சுனாமி

மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது   சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது.  மார்ச் 11 2011 – ஒரு தேசம் சேதம் ஆனது கண்ணீர் மட்டுமே மீதமானது   கடலில் உப்பு அதிகம் என்பதற்காக இப்படியா உணர்ச்சிவசப்படுவது  எங்கள் தேசத்து ஒரு சில அரசியல்வாதிகள் போல் […]

Read More