கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது. மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. […]

Read More

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்…சிக்கல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாக சிறையில் அடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போலீசார்- நர்களிடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம் மருத்துவமனையை ரணகளமாக்கி விடுகிறது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 11 டாக்டர் பணியிடங்களில் தற்போது மூவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இருக்கும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து தவிக்கின்றனர். மேலும் குற்றவாளிகளை […]

Read More