அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி

உறவில்லான் தனக்கு    உறவாய் அமைந்த தோழரோடு உரையாடிய இறைவனின் பேச்சு ! சத்தியத்தின் சாறு ;  நித்தியனின் நீங்காத அருட்பேறு ! விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் வாழ்வியலை வெளிச்சமயமாக்கும் ஒளிகுன்றா வான்விளக்கு ! சுவனத் தென்றலைச் சுவாசித்துணரத் தூண்டும் இறையருள் வசந்தம் !                                                        வல்லான் இறையின் வளமார் ஆற்றலை ஊற்றாக்கிக் காட்டும் அறிவுத் தேனருவி ! பூமான் நபிகளின் பொற்கரத்தில் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் அற்புதம் ! வாழ்வியல் பூங்காவில் இடை இடையே முளைத்துவிடும் அஞ்ஞானக் காளான்களை அடிவேர் அறுக்கும் […]

Read More

எழுதுகோல் !

 எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால்   உழவு செய்வது காதல் ! காகிதங்களில்   உழவு செய்வது …   எழுதுகோல் ! நிர்வாண வெள்ளைக்கு எழுத்து ஆடை அணிவிப்பது எழுதுகோலே !                   யார் மூப்பு அடைந்தாலும்       எழுதுகோலுக்கு மூப்பில்லை ! எழுதுகோல் … சமுதாயத்தைப்  புரட்டிப்போடும் …  நெம்புகோல் ! இதற்கு  எல்லா மொழியும்  தெரியும் !  ஆனால் ………………… பேசத்தெரியாது ! அதே சமயம்     ஜம்பமாய் பேசும் […]

Read More

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.   அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு…)  2.   ஆதியின்றி அந்தமின்றி அழியாத பெரும்பொருளாய் நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் –அவன்தான் வேதம்”குர் ஆன்”கொடுத்த இறைவன்!   (திருவுரு…)    3.   சூனியத்தி லேயிருந்து சூட்சுமத்தைத் தோற்றுவிக்கும் மாண்புமிகுந்த அல்லாஹ் ஒருவன் –அவன்தான் வேண்டியதெல் லாம்கொடுக்கும் இறைவன்!(திருவுரு) 4.   பற்றிருக்கப் பற்றறுத்து பற்றுக் […]

Read More

நலமெலாம் தரும் சத்தியம்

இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்!   பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை யில்கூட இருந்து-பல வெற்றிகள் தரும்இம் மருந்து!      (இஸ்லாம்…)   பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப் பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்! மேவும் புகழினைக் காக்கும்-இந்த மேதினி வியந்து பார்க்கும்!   இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில் எத்தனை மெய்ஞான ரகசியம்! அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும் அனுபவம் சரித்திரப் பரிச்சயம்!   (இஸ்லாம்…)   நடுநிலை […]

Read More

துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Read More

யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி   காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே   தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும் அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம் இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல் சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்   தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி […]

Read More

ஈமானிலே ………

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்         புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்         கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது         சுந்தரநபி வழியே நன்றானது வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல         வலிமை ஊட்டும் ஈமானிலே     […]

Read More

சென்றுவா ரமலானே

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால் உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா         யாப்பிலக்கணம்: இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com […]

Read More

பொறுமை பெறும் பெருமை

கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே தேனீப் பொறுமையேத் தேனின் சுவையாய் பொறுத்தா லரிசியும் பொங்கிடும் சோறாய்ப் பொறுத்தால் கிடைக்கும் புகழ்       யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com                                        kalaamkathir7@gmail.com […]

Read More

நோன்பு

( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் ! நரகக் கூண்டுகளில் அடைபட்ட பறவைகளை விடுதலை செய்கின்றாள் ! பிறைச் சுடர் கொண்டு அக அகல்களில் எல்லாம் ஆன்மீக வெளிச்சம் ஏற்றி வைக்கின்றாள் ! பசியென்ற அமுதம் […]

Read More