தங்கைக்கோர்……. திருவாசகம் !

( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…! நமக்கு முகவரியும் அதுதானே…! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக…! பெண்ணை நிமிர்த்துவதென்பன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும் கண்ணாடி…! கல்வியென்பது அறியாமையை அப்புறப்படுத்துவது ! கல்வியென்பது செல்வம் ! இது எடுத்தாலும் – பிறருக்கு கொடுத்தாலும் குறைவதில்லை…! இன்னொன்றும் தெரியுமா…? கல்வியொன்றுதான் களவாட முடியாத செல்வம்..! […]

Read More

மனைவி

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229   மனைவி …! யாரவள் …? நம் உயிரின் நகல் ! நமக்கான … பகல் !   மனைவி ! நம் காரியங்களுக்கு மருந்து ! நம் கண்களுக்கு அவளே, எப்போதும் விருந்து !   மனைவியொரு… மந்திரி …! – அவள் மதிநுட்பம் வாய்ந்த ராஜ தந்திரி !   அடுப்படிக்கும் வீட்டு ஹாலுக்குமாய் ’ரன்’ எடுத்தே… களைத்துப் போகும், […]

Read More

பயணம்

இறைவனின் பேரருளால்………. …………………………………………………………. பயணம் ————- உறவூரில் திளைத்து, கருவூரில் ஜனித்து, பேரூரை நாடி, பாருலகம் தன்னில், பவனி வரவே, பயணம் வந்தோம். அறியா பருவம், சரியா ? தவரா? தெரியா அழுகை, புரியா சிரிப்பு, சிரிதாய் துரு,துருவாய், மழழையூர் கண்டோம். அன்னையின் அன்பில், தந்தையின் அறிவில், சொல் வளமறிந்து, உரையாடலறிந்து உலகமதை அறிந்திடவே கல்வியூர் பயணித்தோம். ஒன்றில் தொடங்கி, ஒன்றாய் தொடர்ந்து, சென்றே முயன்று, நன்றாய் பயின்று, வென்றே உயர்ந்து, மாணவனூர் கடந்தோம். அள்ளும் அழகு […]

Read More

குழந்தை எனும் கவிதை

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையின் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன் கேட்கும் விஞ்சும் பட்டு மேனியைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்! ப்ரசவத்தில் கதறினாள் உன் தாய் நீ பிறந்ததும் அவள்மீது பட்ட உன் பார்வையால் பட்டெனப் […]

Read More

கர சேவகரே வருவீரா

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க வேண்டும் கர சேவகரே வருவீரா காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துன்னும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் கேடு சுதந்திர இந்தியா ஐம்பதாண்டு […]

Read More

சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம் கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல நாட்காட்டியும்  சொல்லும்விதம்     நாளும்புதுச்  செய்தி ஆட்கொள்ளவே வேண்டும்மனம் ஆர்வம்பெறச் செய்யும் வேட்கைதரும் வேகம்தினம்  வேண்டும்செயல் நோக்கம் தாக்கம்தரும்  ஆற்றல்பெறத்   தள்ளும்கத  வைப்போல் சன்னலும் நம்மிடம் சொல்லிடுமே -நாம் செகத்தினை நோக்குதல் வேண்டுமென்றே – நம் முன்னால் நிலைக்கண்   ணாடியும்தான் – சொல்லும் முன்னால் பிரதி பலிக்கவேண்டும்- என்றே சொன்னால் புரியா விடைகளெலாம்  -நம்மைச் சுற்றிலும் காட்சியாய்ச் சுழல்வதைக்காண் !- எதையும் உன்னால் முடியும் கனவுகளும் […]

Read More

உலக கவிதை தினம்

மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day)   ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன. இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது.  சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும்”,,, எழுதி வெளியிடுவதை மற்றும் உலகம் முழுவதும் கவிதை கற்பித்தல் மற்றும், படித்தல்ஊக்குவிப்பது என்ற நோக்கில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.

Read More

பதறிய மனது பாழ்

பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே அல்லல்படும் மனிதா அறிந்திடு ! பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி அருளாளன் பாதையை மறவாதே ! ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும் புதுநாளை வரவேற்க புறப்படு ! திருவான இறைவனை தினமும்நீ தொழுது மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு ! கல்வியும் ஒழுக்கமும் […]

Read More

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே கெஞ்சிக் கேட்டா லிவர்களின்             கொடுமை யின்னும் கூடுமே பஞ்சில் வைத்தத் தீயினாய்             பாழாய்ப் போகும் தாய்மொழி பிஞ்சு நாவுகள் சொல்லுமே            பிழையாய்த் தமிழைக் […]

Read More

தலைவாரிப் பூச்சூடி உன்னை…

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? – நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால் – கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என் கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு. […]

Read More