ஹைக்கூப் போட்டி !

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கலாம். முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்குட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் :- 10-12-2012 அனுப்ப வேண்டிய முகவரி:- கவிஞர் சுடர் முருகையா பி3/ பிளாக் 59, ஜீவன் […]

Read More

நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:   திரு. வதிலைபிரபா அவர்கள். திரு. மன்னார் அமுதன் அண்ணா. யார் யார் படிக்கலாம்  மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கத் துடிப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம். கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை ————————————————— உன் செல்லக்குறும்புகள் எத்தனையோ முறை எல்லைமீறிய போதும் நான் ஒருமுறைகூட உன்னைக் கோபத்தில் […]

Read More

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு ….இக்கொடுமை ஒருசான்றா? உறுதியாய்க் கொடுமைக்கு …உள்ளமெலாம் உருகாதா? கொத்துக் கொலைகண்டு …குழந்தைகள் நிலைகண்டு கத்தும் கடல்கூட …கதறுமே பழிதீர்க்க தீர்ப்புநாள் வராதென்று ….தீதைச் செய்தாயோ? யார்க்குமே அடங்காத […]

Read More

முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை

முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html அஞ்சல்பெட்டி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post_30.html மரநேயம் (துளிப்பாக்கள்)- http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post.html ஏழை (துளிப்பாக்கள்)   http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_12.html ஆகஸ்டு 2012 பாவையர்மலர் மாத இதழில் ரூ 150 இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய கவிதையை படித்து மகிழுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/05/blog-post_9471.html     இலண்டனில் வெளிவரும் காற்றுவெளி செப்டம்பர் இதழில் என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. கவிதையை படித்துப் […]

Read More

நம்பிக்கை

நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை விட்டு விடு—இறை நம்பிக்கையில் முக்தி பெற்று, நம்பிக்கையாளராய் உயர்ந்துவிடு சொல்வாக்கிலும் , செல்வாக்கிலும், நம்பிக்கையை காப்பாத்திவிடு நம்பிக்கை துரோகத்தை வீழ்த்து நம்பிக்கையின்மையை போக்கு நம்பிக்கையை துணையாக்கு, நம்பிக்கையால் முன்னேறு நம்பிக்கையை பற்றிபிடி அதுவே உனக்கு வெற்றி படி விருதை மு செய்யது உசேன் ஷார்ஜா

Read More

என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் ! சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும் இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !   […]

Read More

பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)     அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு, சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு, ’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !   அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் […]

Read More

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த் தொகையுடனே வானோரைத் …தொடரவும்தான் நெறியளித்தாய்! இருளான ஆன்மாவை …….இறைமறையின் ஒளியாலே அருளான பாதைக்கு ….அழைத்திடுமுன் வழியாமே! நண்பனாக மாற்றினாயே …….நாங்களோதும் குர்ஆனை நண்பனாகப் போற்றுகின்றோம் …. நோன்பையும்தான் மாண்பாக இம்மாதம் மறையோதி ….இரட்டிப்பு நன்மைகளை இம்மைக்கும் மறுமைக்கும் …இனிப்பாகத் தந்திடுமே புடமிடும்நல் லுடற்பயிற்சிப் ….புதுச்சுவையும் பெருகிடவும் திடமுடன்நாம் பெறுதலுக்குத் […]

Read More

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]

Read More

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே இறைவணக்கப் பாடலாய் செல்வி ஆனிஷாவால் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கீழைராஸா வரவேற்றார். வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.லெ. […]

Read More