உவமைகளில் உவமை இல்லா நபி

  (பி. எம். கமால், கடையநல்லூர்)    (பி. எம். கமால், கடையநல்லூர்)           உவமைகள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி உட்கார்ந்து ஒப்பாரி ஓலம்போட் டிருந்தன ! அருகில் சென்று நான் கேட்டேன் சேதி என்னவென்று உத்தம நபிகளுக்கு உவமித்துச் சொல்வதற்கு தங்களில் யாருக்கும் தகுதியே இல்லை என்று ஒப்பாரி  வைப்பதாய் ஒப்புக் கொண்டன !   ஆமாம்- உத்தம நபிகள் உவமைச் சாம்பலில் ஒட்டாத விளக்கு ஒவ்வொரு விடியலின் ஒப்பற்ற கிழக்கு !   […]

Read More

முதல் கோப்பை

முதல் கோப்பை திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                   தோஹா – கத்தர் thahiruae@gmail.com   மதுவை குடிக்க அவன் போனான் ! அவனைக் குடிக்க அது தயாரானது !   போதையில் தள்ளாடி இவன் நடு ரோட்டில் ! பேதை மனைவியவள் வறுமையில் அல்லாடி வீட்டில்!   போதையில் குடிகாரன் தன்னைப் பெற்ற அன்னையே அடிக்கிறான்! போதை தலைக்கேறி தான் பெற்ற மகள் முன்னே ஆடையின்றி நிற்கிறான் !   குடித்து விட்டு கார் ஓட்டியதால் […]

Read More

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்   திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..?   மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்?   உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..?   தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று தாயின் தவிப்பால் அழுகிறாயா?   திரியே.. நீ கரைகிறாயே..! அது என்ன..? வலியின் வார்த்தைகளா..?   திரியே நீ எரிந்தால்.. தியாகம்..! உன்னை எரித்தால்..? கொலை தானே..! […]

Read More

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே ! – மனிதப் பண்பொழுக்கம் அனைத்திற்கும் முழுவுருவே ! அதிபுகழுக் குரியவரே ! முஹம்மதரே ! – உம்மை அன்பாலே புகழ்ந்துரைப்பேன் ! ஏற்பீரே !     […]

Read More

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013

அன்புடையீர் ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் உலகளாவிய “கல்யாண் நினைவு – மாபெரும் கவிதைப் போட்டி”க்கான கவிதைகள் பெறும் நேர அவகாசம் நாளை (15-02-2013) நள்ளிரவுடன் முடிவடைகிறது, இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் புரவலர்கள் வழங்கும் சிறப்பு பரிசுகள் இவையாவும் வெற்றி பெறும் கவிதைகளுக்கு பரிசாக காத்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை கவிதை அனுப்பாதோர் எவரேனும் இருந்தால் உடனே தங்கள் கவிதைகளை rtskavithaipotti2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிக்கான விதிமுறைகள் யாவும் 01-01-2013 திகதியிட்ட […]

Read More

தாயில்லாமல் நானில்லை !

  தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !       தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை ! தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை ! சோகத்தைக் கண்டால் கண்ணீர் விடுவாள் சுகத்தினை வேண்டி இறைவனைத் தொழுவாள் !       சீர்பெறும் கருணையால் தினமும் சிறப்புறுவாள் ! சிந்தைக்கு வழிவிட்டு […]

Read More

மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!

  -தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..!   ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …!   அது யாருடைய கருப் பை …? அன்னை ஆமீனா (ரலி) அவர்களின் கருப் பைதான் அது …!   இந்த உலகைத் திருப்பிப்போட ஒரு மாமணியைச் சுமந்திருந்த கருப் பை அது…!   தந்தை அப்துல்லா தாய் அன்னை ஆமீனா…! இந்தத் தம்பதிகளின் பிள்ளை நிலாதான்… அந்தக் கருப்பை தந்த […]

Read More

பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )   ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !   அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து   சிந்திக்க வைத்த சித்திரமே ! நாயகமே ! – எம் கண்களைத் திறந்து வைத்த கண்மணியே ! நாயகமே !   ஆங்காங்கே கூட்டங்களாய் அலைந்து திரிந்தோர்க்குப் பாங்காகத் தீனைப் பக்குவமாய் எத்திவைத்து […]

Read More

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

( த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு ஹிதாய‌த்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *க‌ச‌ங்கிக் கிட‌க்கிற‌தொரு க‌விதை ! * ம‌ய‌ங்கிக் கிட‌க்கிறாள் ஒரு மாது ! * என்ன‌ கார‌ண‌ம் ? * பிர‌ச‌வ‌ யுத்த‌த்தில் வலியோடு போராடி … க‌ளைத்துக் கிட‌க்கிறாள் ஒரு ச‌கோத‌ரி ! *த‌ன் ப‌த்துமாத‌ வித்தை முத்தாய் த‌ந்துவிட்டு எழ‌முடியாம‌ல் ப‌டுத்திருக்கிறாள் ! * அவ‌ள் உட‌ம்புக்குள்ளே ….. ஆயிர‌ம் ஊசிக‌ளின் தாக்குத‌ல் ! * புய‌ல் […]

Read More

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்கள், கல்வியியல், இளைஞர் நலம், நாடகம், குறும்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.   நூல்கள் 2012-ல் வெளியானவையாகவும், குறும்படங்கள் 2012-ல் தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். […]

Read More