ஹைக்கூ கவிதைகள்

கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————- கருவூலத்தில் பணமில்லை சுயவிளம்பரத்திற்கு மட்டும் இருபத்தைந்து கோடி ——————————————————- கொள்ளையடித்தவன் குடியரசுத் தலைவன் இந்தியாவில்… ——————————————————- ஊழல் குற்றவாளி முதலமைச்சராய்… என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!! ——————————————————- — ================= =  அன்பே கடவுள்  = ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை […]

Read More

இந்நாட்டு மன்னர்கள்

 சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கவிதைகள் சில.. http://www.mathavaraj.com/2010/04/blog-post_16.html இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சில் சுற்றுலாப் பயணிகளோடு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் மகாபலிபுரத்தில் பல்லவ மன்னர்கள் பாண்டிய மன்னர்களோ பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள் மதுரைப் பேருந்து நிலையத்தில் பஞ்சாலைகளுக்கு படையெடுத்தார்கள் திருப்பூரில் சேர மன்னர்கள் தஞ்சை வரப்புகளில் எலி பிடித்தார்கள் சோழ மன்னர்கள்!   மறுபக்கம் குடும்பம் துறந்த சித்தார்த்தன் புத்தன் ஆனான் நம்பி வந்த யசோதரா என்ன ஆனாள்?   அவதாரம் வேலு […]

Read More

மன வயல் செழிக்க வந்த மா மழை

கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன வயல் செழிக்க வந்த மா மழை (பி. எம். கமால், கடையநல்லூர் ) அந்தக் காலம்  அந்தகக் காலம்  கந்தக நெருப்பில்  சந்தனம் வேக  பந்தபா சங்கள்  நொந்தழிந் தோட  மனவயல் பரப்போ   மழையின்றி வாட  தரிசாய் மனங்கள்  தகித்துக் கிடந்தன !   உள்ள வயல்கள் மட்டுமல்ல உலகத்தில்  உள்ள  வயல்களும்  உலர்ந்தே கிடந்தன ! […]

Read More

சூரியன் மேற்கே மறைகிறதா …?

  சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது. உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் ! கவலைகளால் நான் கைது செய்யப்படும் போதெல்லாம் ஒரு வக்கீலாக இல்லை, இல்லை வக்கீலுக்கு மேலாக எனக்கு விடுதலை வாங்கித் தந்து விடுகின்றாய் ! வீட்டைக் காலி செய்யும் படி உரிமையாளர் வற்புறுத்தும் வேளையில், சொந்த […]

Read More

அமைதி !

  அறிவுச்சிந்தனையின் நீரூற்று  கண்ணியத்தின் அடையாளம்  நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம்  சில மனிதநிடமில்லா இப்பண்பு  சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !        ஆக்கம் :மௌலவி ஜகாங்கீர் அரூசி -தம்மாம் .

Read More

பறைவைகளே !. பதில் சொல்லுங்கள் !

வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும்வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமதுநாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும்ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது. தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள்விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனைஇத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாதுவெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன்.தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும்.அதுதான் நிரந்தர வெற்றி. இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில்குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவதுமுஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இதுவெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும்அதுதானாயிருக்கலாம்). நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்! “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !” (கண்ணதாசன்) இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா !! ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார் அவனையே தொழுது கேளுங்கள் ! அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை! பறைவைகளே !… பதில் சொல்லுங்கள் மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே மனதினில் வெறுப்பு தவிர வேறு இல்லையே பறவைகளே! ..  பதில் சொல்லுங்கள்! படைத்தவன் நினைப்பு என்ன பார்த்துச் சொல்லுங்கள் ! அடுத்தொரு உலகம் என்று உரத்துச் சொல்லுங்கள்!

Read More

மை

த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை வேண்டும் ! உண்மையே உய‌ர்வைக் காட்டும் உழைப்பொன்றே சிகர‌ம் காட்டும் ! பெண்மையே பெருமை காட்டும் வீண் பேராசை சிறுமை காட்டும் ! த‌ன்ன‌ல‌ம் பொய்மை காட்டும் […]

Read More

இறை நேசர்கள்

இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !       ’பச்சைநிறமாக’ இருந்தால் பட்டென்று சொல்லிவிடலாம், காய்ந்தவை யாவுங் காயென்று ! ஆனால், பச்சை வாழைப் பழமட்டும் விதிவிலக்கு ! அதுபோல், மானிடருள் – மூச்சறுந்த மறுகணம் முடிவுகட்டிவிடலாம், பிணமென்று ! […]

Read More

நபி பெருமான் வருகை

       நபி பெருமான் வருகை   ( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் )   கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !   மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட மடமையெலாம் ஒழித்து மனிதர்களாய் உயிர்வாழ மாண்போடு வாழும்கலை கற்பித்து தான்நடந்து மட்டில்லாப்  பேரன்பால் வாழ்விக்க வந்தீரே ! (கண்ணான கண்மணியே)   காரிருளில் நடுக்காட்டில் ஏற்றிவைத்த தீபத்தில் […]

Read More