பார், உலகே ! நீ சாட்சி !

  ’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி, 19-01-1968 ‘மறுமலர்ச்சி’ வார இதழில் வெளிவந்த கருத்துச் செறிந்த கவிதை. தருபவர் : எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்     நல்லமனம் நல்லுள்ளம் நாவீறு நன்மை செய்யும் வல்லன்மை வாய்மைநெறி வாழ்வு சுகம் எல்லாமும் எல்லோரும் ஏற்று இனிதாக வாழ்ந்திடவே வல்லவனாம் அல்லாஹ்வை வாழ்த்தித் தொடங்குகிறேன்.   ஆயிரத்து […]

Read More

கவிதை போட்டி

தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ் கவிதை போட்டி தலைப்பு சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும் கவிதை நூல்வடிவில் ஆக்கம் பெற நிபந்தனையின்றி தன்களுக்குசம்மதம் என இணைப்புகடிதம் , கவிதை ஆ-4 அளவு பேப்பரில் இர்ண்டு பக்கங்களுக்கு மிகாமல் 30-06- 2013 ம் தேதிக்குள் அனுப்பவேண்டிய முகவரி இல ஞானசேகரன் , தலைவர், வாழிய உலகநல நற்பணி கன்றம், 7- மங்கலம் தெரு, பழ்னி அலைபேசி: 94422 41622 […]

Read More

வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )

    நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை   எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது   விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல், புரட்சி, தெரசாவே,   இப்படி சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது   வரலாற்றில் விளைந்த சாதனைச் சொற்கள் சாவியாய் விளைந்து சாதாரணமாய்ச் சுவரில்   வரலாறும் தெரியாமல் வருங்காலமும் உணராமல் விளம்பரமாய் எல்லாம் வெளிச்சமாகிறது   ஒருநிலையில் இல்லாத நானும் மனமும் ஒரு […]

Read More

மழையின் மடியில்

கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை  மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்!   சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்!   மழையே குளிர் மழையே இயற்கையனைத்தும் உன்மடியில் மழையே வான் மழையே மயங்கும் மனமும் மனித உடலும் மழைத்துளியின் அன்புப் பிடியில்   மழையே அருள் மழையே மாபெரும் அருளாளன் மனமுவந்து அளித்த மாமழையே வா வா வெகு அழகாய் நலமாகுமே இவ்வுலகம்  உன் வரவால்!……….     பள்ளிக்கூட நியாபங்களையும், பருவத்தையும் எட்டிஎட்டி தொட்டுநின்றகாலம்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டு சூரிய ஒளியைகடன்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலாக்கால இரவொன்றில், வீட்டினுள்கவ்விய இருளின் பயத்தை விரட்ட முற்றத்தில் வந்தமர்ந்துமுழங்காலைகட்டிகொண்டு வானை வேடிக்கை பார்க்கையில்,இருளைகளைய முற்பட்ட மின்மினிகளின் வெளிச்சத்தை விரட்ட எண்ணி, திடீரெனமின்னல் மின்னி, இடி இடித்து துளித்துளியாய் கொட்டியதூறல்கள்,என்தேகம் தொட்டு விளையாட,சட சடவென பெருமழையாய்பெய்யத்தொடங்கியதும், மண்வாசம் மூக்கைத்துளைத்தபடி கண்களைகிறங்கடிக்க, இருந்த இடத்திலிருந்து எழாமல் நனைந்துகொண்டே இருந்தஎனக்குள் மின்னல்கீற்றாய் சிலவரிகள் மின்னி மின்னி இதயத்தை இடித்தன.   இதயத்தில் இதமாய் இடித்த எண்ணங்களை எழுத்துக்களாக்கமுயற்சித்ததின் விளைவு, சின்ன சின்னதாய் கிறுக்கிகொண்டிருந்த நான்முதல் முறையாக எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமைப்படுத்தும்விதமாய், முழுக்கிறுக்களாய் உருப்பெற்று என் பள்ளி நோட்டில்  முளைத்தது முதல்கவிதை இந்த மழைக்கவிதை, ஆர்வமிகுதியால்சிலகிறுக்கல்களை சில இதழ்களுக்கு அனுப்பியபோதும் வெளிவராமல்போகவே, அலுச்சாட்டியம் செய்து அடுக்கடுக்காய் நிறைத்தனநோட்டையும், டைரியென்னும் நாட்குறிப்பையும், விடாமுயற்சியாய்அவ்வபோது மீண்டும் மீண்டும் பெயர்மாற்றி அனுப்பியதில் ஓரிருகவிதைகள் வெளிவந்தது, வெளிவந்த முதல் கவிதையும் 8வரி ”மழை”க்கவிதை ”மரியா” என்ற பெயரில் பதினைந்து வயதில் பதியமிட்டவிதைகள்பல ஆண்டுகள் கடந்து 2009 தில், பாலைதேசத்தில், இணையத்தில் வழியாகபூத்தன பலகிறுக்கல்கள் மலர்கள், அதன்வழியே வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழில் முளைத்தது என் மனவிதைகள் மணமணக்கும் தமிழ்பூவாய். அதனிலிருந்து தொடர்ந்து விதைகிறேன் க”விதை”களை. மண்ணில் விழும் விதைகள்யாவும் முளைத்து எழுவதில்லை, அதுபோல்விழும் விதைகளில் ஒரு விதையேனும் மண்ணை முட்டி முளைத்துப்பூக்காமல் இருப்பதுமில்லை. வான்மழை பூமியை நனைத்து மண்ணுக்குள்நுழைவதுபோல், என்மன உணர்வுகள், பிறரின் மனங்களைத்தொட்டுஉணர்வுகளுக்குள்ளும் நுழைய, தூவிக்கொண்டேயிருப்பேன் கவிதைமலர்களை..     அன்புடன் மலிக்கா  

Read More

என்றும் வாழ்வார் !

என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற் பண்பே மூச்சு !   பதிக்கின்ற பார்வையிலே மிளிரும் ஞானம் ! பார்ப்பவரைத் துல்லியமாய் அளக்கும் ஆழம் !   முதியவர்கள் தமைக் கண்டால் முகம் மலர்ந்து முகமனுடன் மரியாதை செய்யும் சீலம் !   புதியவர்களைக் கூட புன்ன கையால் பொலிவாக்கும் நற்பெருமான் சலாஹு த்தீனார் ! […]

Read More

நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை

.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப் பொறுப்புகளினின்று தடம் புரளாமல் ஓர் குடையாய் விரிந்து உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்.. [மேலும் வாசிக்க] நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை http://tamilamudam.blogspot.com/2013/04/blog-post_22.html

Read More

துஆ செய்து வாழ்த்துகிறேன் !

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும் ஈதுப்பெருநாள் பிறந்திருக்கும் ! சொர்க்கமது திறந்திருக்கும் ! செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் ! சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !     ”ரய்யானின் சொர்க்கபதி அலங்கரித்துக் […]

Read More

அருளைப் பெற்ற பெருநாள் !

பெருநாள் சிறப்புக் கவிதை   அருளைப் பெற்ற பெருநாள் !          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் ! இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !   பசித்ததை, விழித்ததைத்  தனித்த அமலை – இன்று பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் ! பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து படைத்திடும் […]

Read More

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

  1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !       2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் […]

Read More