உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More

தலைகீழ் மாற்றங்கள்

தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது ஒரிஜினலை விட ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன விரல்களை விட்டுவிட்டு நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம். வெற்றியை கொடுத்தவனைவிட பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்…… A.R. Mohamed Sadiq VawaladiMob: 050-1570067 ( U.A.E ) E-mail : armohamedsadiq@gmail.com

Read More

ஜனநாயகம்

ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை,  ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும் ஆட்சியே ஜனநாயகம்.-ஆனால் நாம் இன்று காண்கின்றோம், ஜன அநியாயம், அட்டூழியம். மனிதன் வகுத்த ஜனநாயகத்தை, பறித்ததோ பணநாயகம். மனிதனிடம் இல்லை ஜனநாயகம் கூடியுண்ணும் காக்கைகளிடம் கண்டோம் ஜனநாயகம். அன்று சர்வாதிகாரத்தில், கண்டோம் ஜனநாயகம். இன்றோ ஜனநாயகத்தில், காண்கின்றோம் சர்வாதிகாரம். மதங்களை மோத விட்டு, குளிர் காய்கின்ற அரசியல், அதனில் […]

Read More

முயன்றால் வெல்லலாம்.​.!!!

கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து  நெற்றி              வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த            வழிகளின் துணிவு என்போம்                துயரமாம் நோயில் வீழ்ந்துத்             துடித்திடும் எவர்க்கும் மிக்க நயத்தகு வார்தை மூலம்            நலம்பெற வாழ்த்திப் பேசு உயர்ந்திடப் போகும் தூரம்           […]

Read More

மவுனம் களைந்தால்.​……….​…!!!

மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்     மொட்டின் மவுனம் வாசனையாம்               மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும்  மழையுந்தான்               கூடும் முகிலின் மவுனந்தான் தட்டிக் கேட்கும் புரட்சிகூட              தங்கும் மவுன வெளிப்பாடே மட்டில் பேரா பத்துகளும்              மண்ணின் மவுனச் சீற்றமேயாம்         அச்ச மூட்டி இறைவனுந்தான்          அதிகம் மவுனம் காத்தாலும் எச்ச ரிக்கை மீறும் மனிதனுக்கு          எதுவு […]

Read More

எல்லோரையும் ஈர்த்திட ……….

எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்              தகுதிகள் நிரம்ப உண்டு விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே             விரைவிலே நட்பு கொள்வர் நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்             நம்பிடும் பண்பு வேண்டும்     உன்னிடம் நல்லவை வந்திடும் பொழுதினில்           உளமுடன் பிறர்க்கு நாடு தன்னிடம் வென்றிடும் திறன்களு முண்டெனத்          தகுதியை […]

Read More

நிறை​வேறா ஆசை…….

மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்                                        காணாது போகவே.. அன்புடன் மலிக்கா http://niroodai.blogspot.com

Read More

நிழலும் நிஜமும்

வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன். வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன் வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன். விண் மீன்களை எடுத்து வந்து, அலங்கார தோரணமிட்டேன். மேகத்தில் விதை விதைத்து, வெள்ளாமை செய்தேன். மேகக்கூட்டத்தை குடி நீராக்கி, வினியோகமும் செய்தேன்.-இப்படி கடிவாளமில்லாமல் ஓடுகின்ற, கற்பனைக் குதிரைதான் நிழலோ? அதனால்தான் காலைக் கதிரவன், நிழலை காததூரம் காட்டுகின்றானோ? நிஜத்தின் நிகழ்வுக்கு […]

Read More

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க வைக்கின்றேன் உதிருகின்ற உன் கண்ணீர்-என் உள்ளத்ததை உருக்கும்போது ஆறுதலாய் அணைப்பதைத் தவிர அன்னமேயெனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை காதல்பூ வாடி நிற்க கடல் கடக்க துணிகின்றேன் காகிதக்காசை கைப்பற்ற கண்மணியே உனைபிரிந்து கானகம் செல்லப் போகின்றேன் கரையாதே காதல் சகியே! காற்றில் தூது விடுகின்றேன்- அது காதோடு காதல் […]

Read More

இறவா நட்பு

  நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு   இப்படியான நட்பு இல்லாமையிலும் இயலாமையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இன்னலிலும் இடைஞ்சலிலும் எதற்கும் கலங்கவிடாது எள்ளளவும் களங்கிவிடாது என்றென்றும் உயிர்த்திருக்கும் என்றுமே! இறவாமல் நிலைத்திருக்கும்…   அன்புடன் மலிக்கா துபை http://niroodai.blogspot.com

Read More