பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய், கிருதுமால் நதியிலிருந்து பிரிந்து உருவாகும் கூத்தன்கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் ரகுநாத காவிரி ஆறு, முதுகுளத்தூர் பெரிய கண்மாய்கள் போதிய மராமத்து செய்யாததாலும், 10 […]

Read More

கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு, வரும் வாரத்திற்குள் சப்ளை செய்யப்படும்,” என்றார்.

Read More