இனிக்கும் இஸ்லாம் !

இஸ்லாம் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும் ! இத்துணை சம்பிரதாய சடங்குகளைக் கொண்டதா இஸ்லாம்? என்று அதனைப் புரிந்துக் கொள்ள பகைவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பலாப் பழத்தின் மேலுள்ள முட்கள் குத்துமே என்று அஞ்சுபவர்கட்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனி கிடைக்கும். வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் எனும் முள் கூட கையிலே குத்தி குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்து கொள்ளும் […]

Read More

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” அப்பாஸ் இப்ராஹீம் “இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை” மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI கண்ணதாசனின் […]

Read More

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இங்கிதமும்

  மௌலவி நூஹ் மஹ்ழரி   ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை. விரைவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தொழில் அதிபர்கள், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், இளம் பெண்கள், வணிக முகவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் என்று குழுமத் தொடங்குகிறார்கள். எல்லாரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொள்வதற்காக அவர்கள் செலுத்திய கட்டணம் கொஞ்சமல்ல. ஆயிரக் கணக்கில் பணம் செலுத்தி தங்கள் பெயர்களை […]

Read More

கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,  அனைத்து இயக்க சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன், குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி என்ற பெயரில் பெண்களுக்கான அரபிக்கல்லூரியின் துவக்க விழா  03-06-2012 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் துவக்க விழாவில் ஜனாப் E உம்மர் (மாநில […]

Read More

இஸ்லாம்

“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம் – இது நலமெலாம் தருதல் சத்தியம் !” என்று பாடினார் ஒருவர். ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள் உண்டு. அவ்வாறு சொல்வதற்கேற்ற பொருட் செறிவு உள்ள சொல் ’இஸ்லாம்’ என்ற சொல். அது, நானிலத்திற்கு நலமெலாம் தர வந்த சத்தியம் என்றும் அதற்கு ஏற்ற தத்துவம் […]

Read More

தற்கொலை இஸ்லாத்தில் தடை

( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி, சென்னை – 10 ) “இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கிறான்”. -அல்குர்ஆன் ( 4:29) தற்கொலை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பெருங்குற்றமாகும். ஹள்ரத் வாஹிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “உங்களில் யாரும் யாரையும் கொலை செய்யாதீர்கள். உங்களில் உள்ளவரை கொலை செய்வது தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்வது போல்தான்”. ஹள்ரத் அம்ர் இப்னுல் ஆஸ் […]

Read More

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் பாஜில் பாக‌வி ‘அனைத்து துறைக‌ளிலும் ஆன்மீக‌ம்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த […]

Read More

இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!

ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும். சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும். ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை இருந்தது என்பது பைபிளின் கொள்கையாகும். சிருஷ்டித்த உமது இறைவன் பெயரால் நீர் ஓதுவீராக ! (இறைவனாகிய) அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து தான் (நபியே) நீர் ஓதும். […]

Read More

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள […]

Read More

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.   இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது. […]

Read More