முதுகுளத்தூரில் அமெரிக்க அரசைக் கண்டித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த யூதனைக் கண்டித்தும், அமெரிக்க அரசினைக் கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் 21.09.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பெரிய பள்ளிவாசல், திடல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத்தினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர். மேலும் புகைப்படங்களுக்கு : http://www.facebook.com/media/set/?set=a.4563493724538.188244.1207444085&type=1&l=04b2fc7f98

Read More

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார். முதுகுளத்தூர்.காம் சார்பில் முதுவை ஹிதாயத் சந்தித்தார். இச்சந்திப்பின் விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Read More

கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?

  லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் […]

Read More