அன்றும் இன்றும்

அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும் தாலாட்டும் நோய்போகும் நல்மருந்தும் வாய்பாடும் மனக்கணக்கும் வாய்த்தது நமக்கு அன்று இன்று: தொடர்நாடகம் தருகின்ற தொல்லைக் காட்சியும் பக்கவிளைவுகளின் பக்கமே இழுக்கும் மருந்தும் கணிதப்பொறி,கைப்பேசி, கணினிகளால் மனக்கணக்கும் […]

Read More