பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்-ஐ பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ( ஞாயிற் க்கிழமை) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது இந்திய அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. […]

Read More

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு வரவேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு வரவேற்பு சிங்கப்பூருக்கு வருகைத் தந்திருக்கும் ஜமால் முஹம்மது கல்லூரியின் பொருளாளர், ஹாஜி எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு, 18-10-2024 அன்று அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை உறுப்பினர்கள் சந்தித்து வரவேற்பு விருந்தளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரியின் மாண்புமிகு பொருளாளர் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள், கல்வி சார்ந்த சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் ஜமால் […]

Read More

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா மற்றும் நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி மருத்துவர் திருமதி மதுரம் அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உமா மகேஸ்வரி மாரிமுத்து வரவேற்புரை வழங்கினார். ஏற்றி விடும் ஏணிப்படிகள் என்னும் தலைப்பில் பரமேஸ்வரி தமிழ்வாணன் அவர்களும் ஆசிரியர் என்பவர்… என்னும் தலைப்பில் பேராசிரியர் க.செந்தில் குமார் அவர்களும் உரை நிகழ்த்தினர். வி. நாகஜோதி எழுதிய இதயம் தொடும் உதய கீதங்கள் என்கிற கவிதை நூலினை கவிஞர் கு ரா அவர்களும் […]

Read More

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் அவதூறாக பேசி வரும் நரசிங்கானந் மற்றும் ராம்கிரி என்கிற பயங்கரவாத கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணாம்பட்டு நகர காவல்நிலையத்தில் IUML சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் V.முஹம்மத் தையூப் சாஹேப் அவர்கள் தலைமையில்,IUML நகர தலைவர் ஆலியார் உவேஸ் […]

Read More

கும்பகோணத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா…….

அமீரக காயிதே மில்லத் பேரவை பொறுப்பாளர் ஆவை அன்சாரி இல்ல மணவிழா……. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொறுப்பாளர் ஆவை முகம்மது அன்சாரி அவர்களின் புதல்வி சமீஹா அன்சர் மணமகளுக்கும் சோழபுரம் முஸ்தாக் அலி அவர்களின் புதல்வர் ஹாஜி. ஷாகுல் ஹமீது மணமகனுக்கும் கும்பகோணம் மஹாலட்சுமி மஹாலில் இன்று (13-10-2024) மணவிழா நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் வக்ஃப் வாரிய […]

Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவிலில் கொட்டும் மழையில் நன்றி தெரிவித்த நவாஸ் கனி எம்.பி.

கொட்டும் மழையிலும் கொஞ்சமும் மனம் தளராமல் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொன்ன கே.நவாஸ்கனி எம்.பி.இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 05.10.24அன்று திராவிட முன்னேற்றக் கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருமான திரு திரு.எஸ். ரகுபதி அவர்கள் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோயில் வடக்கு […]

Read More

சென்னையில்அமைதி பேரணி

சென்னையில்அமைதிபேரணி ! இஸ்ரேலின்போருக்கு எதிராகவும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு இரங்கல்_தெரிவித்தும்… தமிழ்நாடு ஷியா ஜமாத் நடத்திய மாபெரும் அமைதி பேரணி ! மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி_பங்கேற்பு ! அக்டோபர்.05, இஸ்ரேலின் லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய பயங்கரவாத யுத்தம் ஓராண்டு நீடிக்கும் நிலையில், போருக்கு எதிராக உலகம் முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் சென்னையில் – ராயப்பேட்டையில் பல்லாயிணக்கான மக்கள் […]

Read More

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை

சேதமடைந்த ஆனந்தூர் நூலகம் : புதிய நூலகம் கட்ட கோரிக்கை ஆனந்தூர் : சேதமடைந்துள்ள ஆனந்தூர் நூலகத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நூலகம் கட்டித்தரக்கோரி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை மறுநாள் 03.10.2024 வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Read More

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் மீலாதுப் பெருவிழா இணையவழியில் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் ‘மாமறை போற்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். […]

Read More

முதுகுளத்தூரில் உலக எழுத்தறிவு தின விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் காதர் ஷா மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது மாணவ, மாணவியர் உலக எழுத்தறிவு தினம் என்ற எழுத்தை தங்களது சிலேட்டுகளில் எழுதி வரிசையாக நின்றனர்.

Read More