ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்                  ( ஹாஜி உமர் ஜஹ்பர் ) அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் ! சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் […]

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் ! இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !   மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு […]

Read More

மாண்புமிகு மன்பவுல் அன்வார்

  ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே… வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய் பேராளன் அல்லாஹ்வின் பெருங்கொடையாம் புகழ் மிக்கக் கலைக்கூடம் மன்பவுல் அன்வார் !   தீராத தீன்பசி தேடிவந்தோர் திகட்டாத தேனின் ருசி அருந்தி நின்று பாரெங்கும் மன்பஈக்கள் பறந்து சென்று புகழ் பரப்பச் செய்யுமிடம் மன்பவுல் அன்வார்   கொடிக்காலில் வெற்றிலையைக் கிள்ளி வந்து கிடைக்கின்ற கூலியிலே தர்மம் தந்து கொடை […]

Read More

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள். உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை […]

Read More

புனித இரவும் புண்ணிய அமல்களும்

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –   புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆனை (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ரு என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். நபியே கண்ணியமிக்க இரவின் மகிமையினை நீர் அறிவீரா? ‘கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் […]

Read More

நிக்காஹ் குத்பா

  (இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன், அவனிடமே உதவி தேடுகிறேன், அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனையே விசுவாசிக்கிறேன், அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்கிறேன். அந்த அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவனை யாரும் வழி கெடுக்க […]

Read More

உறவுப் பாலம்

  முதுவை முஹ்ஸின் ( இரண்டு உண்மைகள் )   அப்போது நான் திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளி மாணவன். முழு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் விடுதியிலிருந்து ஊர் வந்து கொண்டு இருக்கிறேன். வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, கதைப்புத்தகங்கள் எதுவுமே நாங்கள் படிக்கக் கூடாது. பள்ளிக்கூடப் புத்தகங்கள் தவிர எந்தப் புத்தகங்களும் எங்களிடம் இருக்கக் கூடாது. இது எங்கள் விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. மாணவர்கள் பள்ளிப் படிப்பிலே மட்டும் கவனமாயிருக்க வேண்டும் என்ற நல்லார்வத்தில் ஏற்படுத்தப்பட்ட […]

Read More

உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

  ( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள் எழில்மனு வாழ்வின் படிகள் பலன்கள்   எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை எண்ணங்க ளெல்லாம் […]

Read More

“அஸ்கான்” புகழ் வாழ்க !

  ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம் ஆகிறது ! நில்லாத புகழுடைய அல்லாஹ்வின் அருளாலே நிஃமத்தாய் நிற்கின்றார் “எம்-டி காக்கா” ஸ்லாஹுத்தீன் !   “மாமிலாத்தா” நாச்சியாரின் சிப்பியிலே பூத்தமுத்து ! மகிமையுடன் “கண்ணாடி வாப்பா” அப்துல்ஹமீத் வார்த்தமுத்து ! பூமணக்கும் “கொழும்புக்குடம்” ஷேக்கப்துல் காதர் பெற்ற பெண்ணரசி “நஜீமா” வை வாழ்க்கையில் சேர்த்த சொத்து […]

Read More