உலக மண் தினம்

உலக மண் தினம்.  மண் வாசத்தில் மகிழ்வோம்.  மண்ணின் மைந்தர் என்போம். மண்ணாசை கூடாதென்போம்.  மண் காக்க போராடுவோம்.  மண்ணாகப் போக சபிப்போம். மண் சோறு சாப்பிடுவோம்.  பெரியார் மண் என்போம்.  ஆன்மீக மண் என்போம்.  மண்ணில் வீடு கட்டுவோம். மண்பாண்டங்களும் செய்வோம். மண்ணில் தோன்றியவர்  மண்ணில் மறைவரென்போம். தாய் மண்ணை நேசிப்போம்.  மண்ணில் பொழியும் மழை மரவளம் காத்திடுமே.  மரவளம் காப்பதனால் மழை வளம் பெருகிடுமே.  மண்ணின் கீழ் நீர்வளத்தால் விவசாயம் தழைத்திடுமே. மக்கள் தாகம் […]

Read More

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்குதரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ! பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் ! யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் ! நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை […]

Read More

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாகஅன்று புராணக்கதை கதைத்தது ! இன்பமாக வாழ வேண்டுமா ?இனிய தமிழ் படியு்ங்கள் ! துன்பம் தொலைய வேண்டுமா ?தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! சோகங்கள் ஒழிய வேண்டுமா?சந்தத்தமிழ் படியு்ங்கள் ! கவலைகள் போக வேண்டுமா?கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! விரக்தி நீங்க வேண்டுமா ?வளம் […]

Read More

மகாகவி பாரதியார் நினைவு நாள்

மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள மாந்தர்களிடைபாகுபாடு இல்லையெனபாடி வைத்த பாரதி ஓர்பக்குவமிக்க சன்யாசி. தெய்வ பக்தி , தேசபக்தி,மனித நேயம் நிறைந்தமுண்டாசுக் கவிஞன் கூறியதைமனதினிலே யோசி. அவனைப் போல் தேசபக்தி,தெய்வ பக்தி வேண்டுமெனஅவன் வணங்கிய சக்தியிடம்அனுதினமும் யாசி. பாரதியின் பாதம் பணிந்து,சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.11.09.2024.

Read More

பூமியின் எடை

பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட வேண்டும்’ காற்றில் அவற்றின் கோரிக்கைமணமுள்ளதுதான்..சரி… விலங்குகள்அங்குமிங்கும்உலவின..மேயப்போந்தும்,இரை தேடிப்போயும்உலவும் குட்டிகளைத் தேடின..குரலைக்கைகளென உயர்த்தின…எங்கேயோகேட்ட எதிர்க்குரல்களும்கணக்கைநிரப்ப வேண்டுமெனஅரற்றின… எதிலொலித்தகுரல் பூமியின்நகர்தலுக்குஒரு விசையெனக் கொள்ளலாம்தான்..சரி… பறவைகளோகூட்டிலுள்ளசிறகு மிளிராக்குறு குஞ்சுகளும்கணக்கில் வந்தாலும்இரைதேடிப்பறப்பவை இறங்காமல் போமோ எனக்கிரீச்சிட்டன.. ‘எப்படி ஏற்பது..?..பூமி எடைக்கணக்கில்பறந்துகொண்டிரும்பறவைகள்எப்படிச் விடையாகும்..?’ விடுவதாயில்லைபறவைகள்…‘பறக்கும் பறவைகளின் உயிர் விடுதலையாயின்எங்கு ‘தொப்’பென விழும்…? ஞாயம்தான்…பறப்பவைகளும்பூமியின்எடைக்கணக்கில்அமருந்தான்…சரி… மனிதர்களின்வீட்டில்கணக்கெடுப்பாருடன்உரையாடல்…‘நான், மனைவி,பிள்ளைதான்..’ […]

Read More

கவிச்சித்தன் மறைந்தானா ?

கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம் அடைந்ததாகஆடிப்பாடி கொண்டாட சொன்னவன். உச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை என்ற அஞ்சாநெஞ்சன்.ஆங்கிலேயரிடம் அச்சத்தை விதைத்தவன். பாரதியின் பாடல்களை கேட்டமக்கள் மனதில் சுதந்திரஉணர்ச்சியை தீயாய் மூட்டியவன். ஓடும் நதிகளை இணைக்கனும்.நதிகள் அனைத்தும் பொதுவாகனும்.சமத்துவம் காண திட்டம் தந்தவன். வ.உ.சி. சிவா என்ற போராளிகளைஉடன் பிறப்பாய் கருதியவன்.உலகமகா […]

Read More

கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று.( 11 ஆகஸ்ட் 1914) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா…… வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,… பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…… வானில் முழுமதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்…. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,… ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,… ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா உண்மைக்காதல் மாறிப்போகுமா…… அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை…… […]

Read More

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின் ஆணையேற்றுப் பலிப்பீடம் ஏற்றியது! சுய நலமே சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் தியாக உணர்வு பெற்றிட உணர்த்தும் நாளே தியாகத் திருநாள் பக்ரீத்!! -இமாம்.கவுஸ் மொய்தீன் drimamgm@hotmail.com

Read More

மனிதநேயம் பிறக்கட்டும்

புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம் முன்னேறட்டும் மனிதநேயம்…! வாழ்த்துக்கள் 2009 கிளியனூர் இஸ்மத் kiliyanurismath@gmail.com

Read More

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!     உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் […]

Read More