ஓய்வு கேட்க்கும் கனவு

ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள் போகாதே! கனவுகள் மெய்படும்வரை காட்சிகளும் நகராதே! கனவுகள் தேயும்வரை கருவிழியும் சடைக்காதே! காலங்கள் தீரும்வரை கனவுகள் ஓயாதே! கனவுகளும் ஓயாதே கல்லரைக்கு போகும்வரை! அன்புடன் மலிக்கா

Read More

ஏங்கும் நெஞ்சம்

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே! [மீண்டும் மீண்டும்] ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும் அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்! ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன் அணுவுமெங்கும் அசையாது அவன் துணையு மின்றியும்! [மீண்டும் மீண்டும்] இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே! இன்னல் […]

Read More

நிறை​வேறா ஆசை…….

மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்                                        காணாது போகவே.. அன்புடன் மலிக்கா http://niroodai.blogspot.com

Read More

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க வைக்கின்றேன் உதிருகின்ற உன் கண்ணீர்-என் உள்ளத்ததை உருக்கும்போது ஆறுதலாய் அணைப்பதைத் தவிர அன்னமேயெனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை காதல்பூ வாடி நிற்க கடல் கடக்க துணிகின்றேன் காகிதக்காசை கைப்பற்ற கண்மணியே உனைபிரிந்து கானகம் செல்லப் போகின்றேன் கரையாதே காதல் சகியே! காற்றில் தூது விடுகின்றேன்- அது காதோடு காதல் […]

Read More

இறவா நட்பு

  நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு   இப்படியான நட்பு இல்லாமையிலும் இயலாமையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இன்னலிலும் இடைஞ்சலிலும் எதற்கும் கலங்கவிடாது எள்ளளவும் களங்கிவிடாது என்றென்றும் உயிர்த்திருக்கும் என்றுமே! இறவாமல் நிலைத்திருக்கும்…   அன்புடன் மலிக்கா துபை http://niroodai.blogspot.com

Read More

ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/  இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கும். எங்களின் மனார்ந்த நன்றிகள்.. அன்புடன் மலிக்காஃபாரூக்

Read More

தளிர்க்கும் தளிரை…

தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும் உறுப்பென்னும் கருப்பையில் உலவிடும் ஊதாப்பூவை உருத்தெரியாமல் அழிக்க கருப்பையைக் கதறக் கதற கருவறுக்கும் கூட்டமே காதில் கேட்குதா கர்பப்பையின் கதறல் உயிர்வதைச் சட்டம்-உலவும் உயிர்களுக்கு மட்டும்தானா! உடல் உறுப்புக்குள் ஊசலாடும் உயிர்களுக்கில்லையா! சங்கமிக்கும் முன் சற்றே சிந்தித்து உடல்கள் சந்தித்தால் சங்கமம் சரித்திரம் படைக்கவில்லையென்றாலும் சாந்தியடையுமே சதையென்னும் உயிர்.. […]

Read More

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே இல்லாமல் பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே! பச்சோந்தியாக ஆனவர்களே!   ஊதாறித்தனம் செய்துவிட்டு உயிருள்ள எங்களை உயிரற்ற ஜடமாக்கி  உதறிவிட்டுபோவது நீங்கள் உம்போன்றோர்களின் செயல்களால் ஊரடிபடுவதும் உருக்குலைவதும் ஒன்றுமறியாத எம்போன்ற  […]

Read More