துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

  –    முதுவை ஹிதாயத் –   துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று. வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free […]

Read More

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே […]

Read More

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா […]

Read More

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம், மனிதவளம், போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்ற பகுதிகள் இயக்கப்படும். சில அங்கங்கள் குறிப்பாக சந்தைப்படுத்துதல், விற்பனை போன்றவை வியாபாரத்தின் உயிர்நாடி அவை ஒழுங்காக இயங்காவிட்டால், அல்லது முறையாக […]

Read More

பனாத்வாலாவும்…பதர்களும்…! – வெ. ஜீவகிரிதரன்

“”குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் […]

Read More

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது? பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம். மனதில் எதிர்கால வாழ்க்கையைக் […]

Read More

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

வெறுத்து ஒதுக்குவது ஏன்?   அண்மையில் பன்றி ஏன் வெறுத்தொதுக்கப்பட்ட விலங்கானது என்பது குறித்த விளக்கம்/விவாதம் நம் குழும வலைத்தளங்களில் வலம் வந்ததைச் சகோதரர்கள் கவனித்திருப்பீர்கள்.”அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்பதே நமக்குப் போதுமான காரணம் என்றாலும் உரிய விளக்கம் பெற முயல்வது வரவேற்கத் தக்கதே.   உண்ணும் உணவிற்கும் அதனால் ஏற்படும் உடல்,மன பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை முற்றிலும் மறுத்துவிடமுடியாதது.   மனிதனின் நற்குணங்களைக் கொண்ட பறவை,விலங்கு போன்ற உயிரினங்களும் மிருகங்களின் சிற்சில தீய இயல்புகளைக்கொண்ட மனிதர்களும் நம் […]

Read More

முல்லாவின் கதைகள் – தலையில் விழுந்த பழம்…

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் […]

Read More

புறநானூற்று அறிவியல் வளம்

      அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில் […]

Read More

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் . நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது !  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும். நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், […]

Read More