மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட […]

Read More

ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்                  ( ஹாஜி உமர் ஜஹ்பர் ) அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் ! சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் […]

Read More

வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’   என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் […]

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம் சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்      கட்டுமான அமைப்பு இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை […]

Read More

அன்பளிப்பை அலட்சியம் செய்யாதீர் !

  முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   ‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக நினைக்க வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே ! அதே போல் அன்பளிப்பு கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள். நெஞ்சங்களில் […]

Read More

நாவைப் பாதுகாப்போம்

( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி, தேரிருவேலி இருப்பு : ஷார்ஜா ) வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வின்  கருணை கொண்டு துவங்குகிறேன். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ( மனிதன் ) எதைக் கூறியபோதிலும் ( அதனை எழுதக் ) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவனிடம் இல்லாமலில்லை. ( அவன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. ( அல் குர்ஆன் 50 : 18 ) […]

Read More

ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்

தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை   ஹஜ் :   ஒருங்கிணைப்பின் உன்னதம் ( அ. அப்துல் அஜீஸ் பாக்கவி )   கடந்த ஆண்டு நான், எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ் பயணம் சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்; அது ஒரு மகத்தான செய்தி. ஹஜ் முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. […]

Read More

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்…! ஒரு வேளை பிரார்த்தனை..!

வண்ண வண்ண மின் விளக்குகளால் மின்னும் மினாராக்கள்… வித விதமான அரேபிய பேரீச்சம் பழங்கள், பல ரகங்களில் பழ வகைகள் … பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி… தாகம் தணிக்க குளிர் பழச் சாறு… இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும் பள்ளி வாசல்கள்… அசைவ உணவின்றி முழுமை பெறாத சஹர் நேர சாப்பாடு… இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் […]

Read More

பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர் திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை   மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை   ஊனேறி உயிரேறி உள்ளத்தில் […]

Read More