வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!   பசியாறுதலும் பலகாரங்களும் பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை! ருசியான உணவுகளும் குறையும் ரொக்கத்தின் இருப்பும் அருக!   மீண்டும் மீண்டும் தொடரும் மீளாப் பயணம் வரைக்கும் வேண்டும் […]

Read More

அம்மா என்னும் அன்பை நேசி!

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே …..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட ….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே! அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால் ……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும் பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால் …..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர் இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம் …..ஈடில்லா அம்மாவின் […]

Read More

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்  மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள் …மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப் பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப் …பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!          கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக் …காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால் பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள் …பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச […]

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம் அடியேனின் தொழிறசாலை பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கிய வேலையாட்களை வேகமாய் உயர்த்திய வேகம் குறையாததால் மோகம் கொண்டு மொய்க்கின்றோம்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அன்று படித்தோம் அதிரைப் பள்ளியில் இன்று உணர்ந்தோம் இத்தேசப் புள்ளியில் ஒன்றே இனம் என்றே மனம் பாசக் கயிற்றால் நேசம் கொண்டு அரவணைக்கும் அரபி அனைவர்க்கும் […]

Read More

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு ….இக்கொடுமை ஒருசான்றா? உறுதியாய்க் கொடுமைக்கு …உள்ளமெலாம் உருகாதா? கொத்துக் கொலைகண்டு …குழந்தைகள் நிலைகண்டு கத்தும் கடல்கூட …கதறுமே பழிதீர்க்க தீர்ப்புநாள் வராதென்று ….தீதைச் செய்தாயோ? யார்க்குமே அடங்காத […]

Read More

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த் தொகையுடனே வானோரைத் …தொடரவும்தான் நெறியளித்தாய்! இருளான ஆன்மாவை …….இறைமறையின் ஒளியாலே அருளான பாதைக்கு ….அழைத்திடுமுன் வழியாமே! நண்பனாக மாற்றினாயே …….நாங்களோதும் குர்ஆனை நண்பனாகப் போற்றுகின்றோம் …. நோன்பையும்தான் மாண்பாக இம்மாதம் மறையோதி ….இரட்டிப்பு நன்மைகளை இம்மைக்கும் மறுமைக்கும் …இனிப்பாகத் தந்திடுமே புடமிடும்நல் லுடற்பயிற்சிப் ….புதுச்சுவையும் பெருகிடவும் திடமுடன்நாம் பெறுதலுக்குத் […]

Read More

அன்பு

மனக்கேணியின் வற்றாத ஊற்று உயிர்க் கயிற்றால் உணர்வு வாளியைக் கட்டி கண்களாம் குடங்களில் ஊற்று கண்ணீராகும் அன்பு ஊற்று அள்ளிக் கொடுத்தால் அளவின்றித் திருப்பிக் கிடைக்கும் சூட்சமம் பக்தி, பாசம், நட்பு, காதல் பற்பல கிளைகள் கொண்ட அற்புத மரத்தின் ஆணிவேர் பூமிச் சுற்றவும் பூமியைச் சுற்றியும் பூர்வீக அச்சாணி அரசனும் அடிமையாவான் கிழவனும் மழலையாவார் தட்டிக் கேட்கும் அதிகாரம்; எட்ட முடியாத தூரம் தட்டிக் கொடுக்கும் அன்புப் பெருக்கால் எட்ட முடியும் நெருக்கம் பிள்ளைகளின் கிறுக்கல்களை […]

Read More

குழந்தை எனும் கவிதை

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையின் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன் கேட்கும் விஞ்சும் பட்டு மேனியைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்! ப்ரசவத்தில் கதறினாள் உன் தாய் நீ பிறந்ததும் அவள்மீது பட்ட உன் பார்வையால் பட்டெனப் […]

Read More

பயணங்கள்

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மிருந்ததை மறந்து கனவினில் மிதந்திடும் நீயும் ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும் உறுதியை நம்பியே மரணம் வருவதும் பயணம்; அதுவரை உலகில் வாழ்வதும் நிலையிலாப் பயணம் பருவமும் மாறி வளர்சிதை மாற்றம் படிப்பினைக் கூறிடும் பயணம் மடியினில் சாய்ந்து […]

Read More

சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம் கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல நாட்காட்டியும்  சொல்லும்விதம்     நாளும்புதுச்  செய்தி ஆட்கொள்ளவே வேண்டும்மனம் ஆர்வம்பெறச் செய்யும் வேட்கைதரும் வேகம்தினம்  வேண்டும்செயல் நோக்கம் தாக்கம்தரும்  ஆற்றல்பெறத்   தள்ளும்கத  வைப்போல் சன்னலும் நம்மிடம் சொல்லிடுமே -நாம் செகத்தினை நோக்குதல் வேண்டுமென்றே – நம் முன்னால் நிலைக்கண்   ணாடியும்தான் – சொல்லும் முன்னால் பிரதி பலிக்கவேண்டும்- என்றே சொன்னால் புரியா விடைகளெலாம்  -நம்மைச் சுற்றிலும் காட்சியாய்ச் சுழல்வதைக்காண் !- எதையும் உன்னால் முடியும் கனவுகளும் […]

Read More