இளமையில் வறுமை

சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத நினைந்த போழ்து கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று வஞ்சித்து வரி எழுதி விட்டான் வரலாற்றை வறுமை கோடாக இட்டு வந்துவிடாதே இதை மீறி என்று வதைப்பதற்காய் விதையிட்ட சோகம் பால் போன்றது பிள்ளை பருவம் தேன் போன்றது மழலை இதயம் மலர் போன்றது […]

Read More

சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு

தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம் தலைப்பில்லாத கதையில் பொருளிராது பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான் என்பதால் பொருளோடு உள்ள ஒரு எண்ணச் சிதறலை இங்கு வெளியிடுகிறோம் கொலைதான் இக்கதையின் கரு கொலையை வரலாறு என்கிறேன் என்று குலை நடுங்க வேண்டாம் யாரும் மனித  ஜாதியின் துன்பம் யாவுமே பணத்தால் வந்த நிலைதானே என்றான் ஒரு கவி வந்த துன்பமெல்லாம் பணத்தால் என்றால் உலகில் தோன்றிய ஆதி மனிதன் உள்ளங் கைகளில் பணம் […]

Read More

வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன இந்த வன்செயலை கண்டித்து பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது பித்தம் தெளிவது எப்போது? எந்த காலத்திலும் திருந்துவதில்லை இந்த பொல்லாத ஜென்மங்கள் பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம் பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக; பையனாக இவன் பிறந்ததற்காக! பண்பில்லாத சிறுமதி யாளர்களே; அவதாரம் எடுத்தா நீ இங்கு ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்? பெற்றோர் உனைப் பெறுவதற்காக பிரத்யேக தவம் ஏதும் செய்தார்களா? வரம் ஏதும் பெற்று வந்தவனா நீ? வரதட்சணை ஏன் பெறுகின்றாய்? என்ன […]

Read More

விதை நெல்

வேலிக்கு வேலி வைத்தோம் வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம் ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு ஆடியில் விதைக்க வேணும் விதைப்பதற்கு நெல் வேணும் விளைவதற்கு மழை வேணும் மானதுராச மானாபிமானம் பார்க்கணும் வெள்ளமா மடைதிறந்த மழை இங்கு பெய்யணும் மாதமோ ஆணியசி மழையே இல்லாம போச்சு நேரம் நகர்ந்து நாழி கழிந்தது காலமதுள் கணிந்ததுவே வெண்ணிற வானும் நீளம் பாவ வெள்ளி முளைச்சது இல்லாம போகா காலத்து மேட்டுல நின்ன கதிரேசன் கார்மேக தாய்  – கண்டு […]

Read More

முள்வேலி

கப்பலோட்டியவனின் கதை அறிவீர் கப்பலில் ஓடியவன் காதை இது தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட தவளைகள்தான் நாங்கள் சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள் இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள் இதயமெல்லாம் நினைவுகளையும் நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து நீள நெடுகடல் தாண்டினோம் பணமெனும் மாயனை ஆசையெனும் பேழையினுள் சிறை பிடிக்க துடிக்கிறோம் சேமித்து விட நினைக்கிறோம் அதனை சேர்த்துவிட துடிக்கின்றோம் பணம் பத்தும் செய்யும் அல்லவா? பொழுதுகளோ புலர்ந்திங்கு […]

Read More

என் செய்வேன்?

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி வைத்து தார் குச்சிகளால் தினமும் தீண்டினால் அவை என் செய்யும் காண்பவர் வாழாவிருப்பாரோ கண்களை முடிகொள்வாரோ வாயில்லா ஜீவன் அதை வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா மனித மனம் என்ன மிருகத்திலும் கொடியதா – அல்லது மங்கி மழுங்கி விட்டோடா? பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது […]

Read More

பாலஸ்தீன பாலகனே…………‏

பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ என்னாள் குமுற இயலவில்லை உன் நெந்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய் காலம் உனக்கு விடை தந்து விட்டது காயம் உனது ஆறி விட்டது இதயமோ எமது? படை பட்டாளங்களுக்கு முன்னால் பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும் கற்கள் எம்மாத்திரம் என […]

Read More

அன்பு மானிடா!

அன்பு மானிடா! ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை அந்த வாழ்விலே ஆறு பருவம் அழகிய குழந்தை ஒன்று ஆசை மழலை இரண்டு அன்புச் சிறுவர் மூன்று வன்மிகு வாலிபம் நாலு பன்மிகு வயோதிகம் ஐந்து முற்றும் கடந்த முதுமை ஆறு முதல் நான்கு அறியாமல் கடந்துவிடும் ஆறாம் பருவமதில் குழந்தை மனது திரும்பிவிடும் இடையிருக்கும் இருபருவமதில் நீ இணையற்ற  வாழ்வு வாழவா? அற்பத்திலும் அற்ப உலகில் அற்புதமான வாழ்வைத்தேடி அலைதிரயும் அன்பு மானிடா அமைதியான வாழ்வு அமைதியானப் […]

Read More