ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் ! அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை ! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு – ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் ! அங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே, […]

Read More

வானொலி உரை

மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு அகிலத்தை ஆளுகின்ற வல்லவனே அல்லாஹ் ! உன்பெயர் தொட்டு இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! (வானொளி ஆறின் அன்பு நெஞ்சங்களே!!) கருணைக் கடலான காவலன் அல்லாஹ்வின் சிறப்பு மிகு சாந்தியும் சீர்மிகு சமாதானமும் நம் அனைவர்மீதும் நின்றிலங்கப் பிரார்த்திக்கிறேன் ! புனிதமும் புண்ணியமும் […]

Read More

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி ! ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி ! கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் ! கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் ! கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக் காணிக்கை செய்திடுவான் காமத்தை […]

Read More

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

விண்ணும் மண்ணும் விதி கடலும் வானும் கதிரும் விண்மீனும் பொன்னும் பொருளும் வான்முகிலும் பச்சை மரமும் இலை கொடியும் எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனை என்றும் புகழும் என்னிறைவா ! உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே ! அருமைமிகு சகோதரிகளே ! பண்பான பெரியோர்களே ! பெருமை மிகு நேயர்களே ! தத்துவப் பெட்டகமான கண்ணிய மிக்க மாதம் புனித ரமளானின் புண்ணியங்களைத் தேடிக் கொண்டிருக்கும் தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் […]

Read More

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )

கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது ! இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம் ! எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் […]

Read More

தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் ! புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் ! அல்ஹம்து லில்லாஹ் ! பசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ! […]

Read More

தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)

எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும், ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே ! உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே ! உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே ! தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை உத்தமர்கள் போற்றுகிறார் ! புகழுகிறார் ! பாடுகிறார் !! உலகமெலாம் […]

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ? கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை ) கலங்கி ஓடிய சோதனைக் காண்டம் வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் ! வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் ! பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம் பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை ! […]

Read More

தீண்டாமை

தீண்டாமை :         கொன்றுவிடு வேற்றுமையை !           ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ ”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத்  “தீ” யென்ற சூடான ஓரெழுத்தே முதலெழுத்து ! வேண்டாத உணர்வுகளை விதைத்திட்ட தீண்டாமை  வேண்டாமே ! வேண்டாமே ! என்கிறது அனைத்துலகு ! ஆண்டாண்டு காலங்கள் அகிலமெல்லாம் ஒன்றிணைந்து  ஆற்றுகிற பணிகளிலும் முளைக்கிறது தீண்டாமை ! தோன்றுகிற நாகரீகம், துளிர்விட்ட விஞ்ஞானம்  தலையெடுத்த உலகினிலும் வாழ்கிறது தீண்டாமை ! மண்பிறந்த […]

Read More