கஃபா ஆலயம்

  (முதுவை கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்)   அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் !       மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை மாண்புடன் அருளும் ஆலயம் !       ‘அஜமிகள் அரபிகள்’ சேர்ந்திடும், அஹதாம் அல்லாஹ் ஆலயம் ! ’ஹஜருல் அஸ்வது’ மாணிக்கம், கஃபா வழங்கிய […]

Read More

எழுத்தின் சேவை அழியாது !

      ( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ! ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ! ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ! ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை ! எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு ! எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு ! இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள், எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !!   […]

Read More

நபியின் மடியே வேண்டும் !

  (முதுவைக் கவிஞர்  ஹாஜி, உமர் ஜஹ்பர்)   அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !       சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை அவர்புகழுக் கெல்லையில்லை – அவர் இறையருளே ! பேரருளே ! மாற்றமில்லை !       அருங்குணமே ! அண்ணலரே […]

Read More

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே ! – மனிதப் பண்பொழுக்கம் அனைத்திற்கும் முழுவுருவே ! அதிபுகழுக் குரியவரே ! முஹம்மதரே ! – உம்மை அன்பாலே புகழ்ந்துரைப்பேன் ! ஏற்பீரே !     […]

Read More

என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் ! சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும் இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !   […]

Read More

பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)     அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு, சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு, ’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !   அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் […]

Read More

வேர்கள் : என்றும் வாழும் உமர்

முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா ! ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் ! மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான் மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் ! முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன? மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே ! வியப்பாரே !! தகைசார்ந்த வெண்ணிலவுக் கவிஞருடன் தமியேனும், தன்னடக்கம் கூறுகிறேன் ! துளிமுகிலாய் சேருகிறேன் ! விழுதுகளும் வேருடனே வீற்றிருக்கும் வேளையிலே, இந்த விழாவிற்கு இந்த […]

Read More

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், மக்கள் எல்லோரும் விரும்பத் தகுந்ததாகவும், கேடில்லாததாகவும், மிகுந்த விளை பொருளை ஈட்டித்தருவதுமே நாடாகும். மேலும் “பிற அண்டை நாட்டு மக்கள் தன் நாட்டில் குடியேறுவதால் ஏற்படும் […]

Read More

ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

ரமளான் உரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் ! அன்பார்ந்த நேயர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து […]

Read More

நோன்பு குறித்த வானொலி உரை – பகுதி 2

வானொலியில் பேசிய நோன்பு பேச்சு : பகுதி 2 ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ ) எல்லா உலகமும் ஏகமாய் ஆளும் வல்லான் ஒருவன் அல்லாஹ்வின் திருப்பெயரைப் போற்றி புகழ்கிறேன் ! அவன் திருவருளை வேண்டிப் பிரார்த்தித்து இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! பொறுமையின் மாதமென்றும் – புண்ணியத் திங்களென்றும் போற்றிப் புகழத்தக்க கண்ணிய மாதத்தில் – பசித்திருந்து – விழித்திருந்து – தாகம் பொறுத்து […]

Read More