இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் . 2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும். 3. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம். 4. நீங்கள் […]

Read More

கண்விழிக்கும் போது, செல்லமாய் “கொஞ்ச வேண்டும்’

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348963 மதுரை : துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா… டவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா… என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி […]

Read More

உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ?

உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ? உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை. ராபின்சர்மா என்கிற ஒரு அமெரிக்கர் எழுதியுள்ள புத்தகம் கூடஞு எணூஞுச்tணஞுண்ண் எதடிஞீஞு என்பது. அதனுடைய தமிழாக்கம் மேன்மைக்கான வழிகாட்டி அண்மையிலே வெளிவந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் படித்தபோது பல சின்னச் சின்னச் செய்திகள், வாழ்க்கையின் பெரிய பெரிய உண்மைகளை உணர்த்துவதாக இருந்தன. இன்றைக்கு உலகத்திலே இருக்கிற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் […]

Read More

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!

டாக்டர். சௌந்தரராஜன் – “ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் […]

Read More

டயபடீசும், அதனைத் தடுக்கும் முறையும்…

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது? உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா? ஆமாம்… திடீரென்று எடைகுறையும். […]

Read More

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

புகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் […]

Read More

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு […]

Read More

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது […]

Read More

நோய்களை உருவாக்கும் ‘நான் ஸ்டிக்’ பாத்திரங்கள்!

மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள். ஒட்டவே ஒட்டாது நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த […]

Read More

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும். இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் […]

Read More