துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற […]

Read More

துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய பொங்கல் விழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு சிறப்பாக 20.1.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.  துணைத்தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய கன்சல் மதுரை அசோக் பாபு, ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவுது, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரி […]

Read More

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் !

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!               துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம் 12/01/2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு துபை ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் கான்ஃப்ரன்ஸ் அரங்கில் நடைபெற்றது. அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன், இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில் இன்றைய நிலையில் நமது அமீரக […]

Read More

கீழப்பனையடியேந்தலில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.10.2010 சனிக்கிழமை வரை கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் நடைபெறுகிறது. நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. திட்ட அலுவலர் எஸ். சிக்கந்தர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்துள்ளார். தகவல் உதவி : தாரிக், சீனி ஜெராக்ஸ், முதுகுளத்தூர்

Read More

சென்னை கருத்தரங்கில் டாக்டர் அமீர் ஜஹான் பங்கேற்பு

  சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.   இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி […]

Read More

துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் சேவைகள் குறித்து பெருமிதம் கொண்டார். இத்தகைய பணிகள் தொடர அனைத்து இந்திய அமைப்புகளும் தங்களது நல்லாதரவினைத் தொடர்ந்து […]

Read More