துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பர்வீன் பானு, ஜாபர் அலி உள்ளிட்ட ரசமாயி நிர்வாகக்குழுவினர் செய்திருந்தினர்.

Read More

துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

துபாய் : துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம் 30.05.2012 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய சமூக நல மையக் கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பணிகளில் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்திய சமூக நல மையம் மேற்கொண்டு வரும் அனைத்து சமூக நலப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்திய சமூக நல மையத்தின் […]

Read More

பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

27/05/12 மாலை  பட்டுக்கோட்டை, ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளிவாசலில் சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 1) மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு வழங்கும் சலுகைகள்,உதவிகள்,மானியங்கள் பற்றிய விபரம். 2) ஏழை மாணவர்களுக்கு ரூ 8 இலட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப் உதவி பற்றிய விபரம். 3) +2 மாணவர்களுக்கு இலவச டியுசன்களுக்கான ஆசிரியர் சம்பள உதவி பற்றிய விபரம். 4) ஜக்காத்தின் மூலமாக பைத்துல்மால் துவங்கும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் ரூ10,0000/ ஊக்கத்தொகை வங்குதல் பற்றிய விபரம். 5) […]

Read More

துபாயில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு குறித்த கருத்தரங்கு

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் ‘மனிதவள மேம்பாடு’ குறித்த சிறப்புக் கருத்தரங்கினை 11.05.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் நடத்தியது. கருத்தரங்கிற்கு துபாய் இஸ்லாமிய வங்கியின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜாபர் அலி தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். துபாய் ஹோல்டிங் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறையின் முதுநிலை ஆலோச‌க‌ர் பொன் முஹைதீன் பிச்சை  மற்றும் அபுதாபி எண்ணெய் நிறுவன மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர் ரஃபீக் ஆகியோர் மனிதவளமேம்பாடு குறித்த உரை நிகழ்த்தினர்.      அத‌னைத் தொட‌ர்ந்து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது. […]

Read More

துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் ; துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 16.05.2012 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளக்கில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. திருச்சி சையது ஹதீஸ் வாசித்தார். விருதுநகர் சையது ஹுசைன் தீனிசைப் பாடல் பாடினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முஹைதீன் இஸ்லாத்திற்காக பெண்களின் தியாக வரலாற்றை உருக்கமாக நினைவு கூர்ந்தார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்வினை […]

Read More

துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை கிரீக் பூங்கா அரங்கில் சிறப்புற நடைபெற்றது. ஆடவர் தினத்திற்கு துபாய் தமிழ்ச் சங்க துணைத்தலைவரும், நிறுவனப் புரவலருமான ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் பிரசன்னா மற்றும் பொருளாளர் கீதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை – ஃபர்கான், வினேஷ், சஜிந்த், அர்ஜீன், விபிஷ், சிரிஷ் ஆகியோர் பாடினர். திருக்குறளை வசந்த் வாசித்தார். […]

Read More

துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் […]

Read More

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. […]

Read More

ஹூமர் கிளப் இண்டெர்நேசனல் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம்‍

துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம் 11-ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்டம் திருப்ப‌த்தூரைச் சார்ந்த நாவலர் கௌஸ் முகைதீன் கலந்து கொண்டு பேசுகையில் நகைச்சுவையின் அவசியத்தையும் அது எவ்வாறு நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அளிக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.சிறப்பு விருந்தினருக்கு […]

Read More

சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருடன் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 05-05-2012 அன்று, மாலை 5  மணி முதல் 7 மணி வரை, “தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஒன்றை, சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான் சாலையில் அமைந்துள்ள சுல்தான் பிளாசாவில் மிகச்சிறப்பாக நடத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் 24  ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் […]

Read More