குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புது தில்லி, ஜூலை 22: நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகள் ஆதரவில் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். இதில் பிரணாப் முகர்ஜி மொத்த மதிப்பில் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு சுமார் […]

Read More

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது.  தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறுபட்ட இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில், சுமார் […]

Read More

துபாயில் கோடையைக் குளிர்வித்த‌ சிரிப்ப‌லை

துபாய் : உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை ஜுலை மாத‌ ந‌கைச்சுவை கூட்ட‌ம் 13.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. உல‌க‌ நகைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை த‌லைவ‌ர் முஹைதீன் பிச்சை த‌லைமை வ‌கித்தார். விடுமுறையில் தாய‌க‌ம் சென்றிருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ந‌கைச்சுவை நிக‌ழ்வுக‌ளை ப‌கிர்ந்து கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு த‌ருண‌த்திலும் ந‌கைச்சுவை இருப்ப‌த‌னை இந்நிக‌ழ்வுக‌ள் உண‌ர்த்துவ‌தாக‌க் குறிப்பிட்டார். உத‌வித் த‌லைவ‌ர் இத்ரீஸ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். பாவை நியாஸ், முத்துக்கோதை, […]

Read More

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழுவின் நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர் டாக்ட‌ர் ச‌ன்னி குரிய‌ன் ர‌த்த‌தான‌ முகாமிற்கு த‌லைமை வ‌கித்தார். உயிர்காக்கும் ர‌த்த‌தான‌ சேவையில் 113 பேர் க‌ல‌ந்து கொண்டு ர‌த்ததான‌ம் செய்த‌தாக‌ ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் […]

Read More

துபாயில் ர‌ம‌ளானை வ‌ர‌வேற்கும்‌ முப்பெரும் விழா

துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல்ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உலமா பேர‌வை ர‌ம‌ளானே வ‌ருக‌ ! ர‌ஹ்மானே நிறைவ‌ருளை த‌ருக‌ !!, தொட‌ர் சொற்பொழிவு நிறைவு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ப‌ய‌ண‌ம் தொட‌ரின் 13 ஆவ‌து வார‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ முப்பெரும் விழா 11.07.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெற்ற‌து. ஈடிஏ டி.என்.எஸ். சீனிய‌ர் எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் ஏ. நூருல் ஹ‌க் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் ப‌ய‌ண‌த்தில் ப‌ல்வேறு ப‌டித்த‌ர‌ங்க‌ளை […]

Read More

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்தனர். அந்த கிராமத்தினர், காத்தாகுளம் கிராமத்தினர் குடிநீர் எடுக்க தடைவிதித்ததால், கடும் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று, ஆய்வுப்பணிக்காக வந்த முதுகுளத்தூர் பி.டி.ஓ., முத்திளங்கோவன், மேற்பார்வையாளர் சேதுபாண்டியை […]

Read More

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி ராஜா திருமண மஹாலில் 07.07.2012 அன்று வெகு சிறப்பாக […]

Read More

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே இறைவணக்கப் பாடலாய் செல்வி ஆனிஷாவால் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கீழைராஸா வரவேற்றார். வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.லெ. […]

Read More

துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மனோவின் இன்னிசை மழை

துபாய் : துபாயில் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து மனோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார் தலைமை வகித்தார். முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்று சிறப்புறை நிகழ்த்தினார். தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் […]

Read More

துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி 28.06.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை அட்லாண்டிஸ் ந‌ட்ச‌த்திர‌ ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்வில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் சுபோத் காந்த் ச‌ஹாய் ப‌ங்கேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ சுற்றுலாத்துறை ம‌த்திய‌ கிழ‌க்கில் இருந்து வ‌ரும் ப‌ய‌ணிக‌ளை அதிக‌ அள‌வில் க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து. குறிப்பாக‌ ம‌ருத்துவ‌த்துவ‌த்திற்காக‌ வ‌ரும் ப‌ய‌ணிக‌ள‌து எண்ணிக்கையும் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ஐரோப்பா உள்ளிட்ட‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளை ம‌ட்டுமே த‌ங்க‌ள‌து ஓய்விற்காக‌ சென்று வ‌ந்த‌ […]

Read More