கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி

கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி கோவை : கோவை ஏ.ஐ.கே.எம்.சி.சி சார்பில் சினேக சங்கமம் நிகழ்ச்சி குனியமுத்தூர் என்.எஸ். கே. மஹாலில் 04-10-2024 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பானக்காடு செய்யது மொயின் அலி சிஹாப் தங்கள் வருகை தந்தார். மாணவரணி தேசிய செயலாளர் புளியங்குடி அல் அமீன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read More

இராமநாதபுரம் மருத்துவருக்கு கௌரவம்

இராமநாதபுரம் மருத்துவருக்கு கௌரவம் கோவை : கோவை கே.ஜி. ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இராமநாதபுரம் இதயவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜவஹருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அப்போது கே.ஜி. ஆஸ்பத்திரியின் தலைவர் கே.ஜி. பக்தவச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read More

மதிவதனி அர்ஜுன் சம்பத் மோதல்…

மதிவதனி அர்ஜுன் சம்பத் மோதல்… மதிவதனி பார்ப்பான் என்று சாதியைச் சொல்லி கேவலப்படுத்துகிறார் என்று பொது வெளியில் தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அடிக்கப் போகிறார் அர்ஜுன் சம்பத். பாவம்… பரிதாபமாக உள்ளது அர்ஜீன் சம்பத்தின் நிலை…   பார்ப்பான் என்று மதிவதனி சொன்னதற்கு எப்படி அந்த வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அடிக்கப் பாய்கிறார்.  நல்ல வேலை திருவள்ளுவர் இப்போது உயிருடன் இல்லை வேதம் ஓதுபவரை திருவள்ளுவர் பார்ப்பான் என்று தான் பதிவு செய்திருக்கிறார். மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் […]

Read More

சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்…….

சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்……. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் “வக்ஃப் சட்ட திருத்த மசோதா – 2024 – ஆலோசனைகளும் – ஆட்சேபனைகளும்” எனும் தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் மாபெரும் கருத்தரங்கம் இன்று (27-09-2024) மாலை நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் Ex MP அவர்கள் தலைமையில் நடைபெற்ற […]

Read More

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்.” இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை […]

Read More

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை ::; சென்னை அண்ணா நகரில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் காவல் ஆய்வாளர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு சாஸ்திரி நகரிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளராக ஆனந்த்பாபு பணியாற்றிய போது நில விவகாரத்தில் தலையிட்டதாக புகார் எழுந்தது. சிவில் வழக்கில் தலையிட்டதால் நீதிமன்ற […]

Read More

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

Read More

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : குஷ்பு

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : குஷ்பு பாலியல் குற்றச்சாட்டுகள், புகார்களை யாரும் மறைக்க வேண்டியது இல்லை என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், “திரைத்துறை மட்டுமல்ல, மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு பிற்பகல் 1 மணிக்குள் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

Read More

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், […]

Read More