உளம் தொடும் ஒரு கதை!

இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன். இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது. எல்லாப்பக்கம் சன சமுத்திரம். நான் […]

Read More

இது விற்பனைக்கு அல்ல !

  ( காயல் யூ. அஹமதுசுலைமான் )   அது ஒரு வெயில் கொளுத்தும் மதிய வேளை மணி 1.30 க்கும் 2க்கும் இடையில் இருக்கும். ஆங்காங்கே காணும் இடமெல்லாம் கானல் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. பெரிய போக்குவரத்து நெரிசல் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் நான்கு முனை சிக்னல் கொண்ட சாலைகள். ஒரு முனையில் இருந்து வாகனங்கள் நேர் ரோட்டில் சீறிக்கொண்டும் மறுமுனையில் உள்ள வாகனங்கள் எல்லாம் ‘யு’ டேர்ன் போட்டுக் கொண்டுமிருந்தன. பாதசாரிகளோ பச்சை மனித சிக்னலுக்காகக் […]

Read More

பாதைகள் ———— ஜே.எம். சாலி

பாதைகள் ஜே.எம். சாலி     சபியா வந்திருக்கிறாள். நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ? அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா இருக்கிறியா. தங்கச்சி?” என்றார். ‘வந்தக் காரியத்தைச் சொல்லச் சொல்கிறார்’ என்பதைச் சபியா புரிந்து கொண்டாள். அவ்வப்போது, தம்மைத் தேடி வருபவர்களில் சபியாவும் ஒருத்தி என்பதைத் தவிர, அதிகமாக […]

Read More

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் !   குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! […]

Read More

கனிகரம்

அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே..  அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆவல்.. ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்று அந்தத் தாய் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் மனம் நொந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். […]

Read More

சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட்டோடு அடுத்த வாரம் துபாய்க்குப் பறக்க வேண்டும். துபாயில் இதைவிடப் பல மடங்கு சம்பளம் கூடிய வேலையொன்று ஐயாவுக்காக காத்திருக்கிறது. அந்த துபாய்க் கம்பெனியில் […]

Read More

தலைமை

பெளர்ணமி வெளிச்சத்தில் விண்ணை நோக்கி நீண்டு நின்ற இரண்டு வெள்ளை நிற மினராக்களும் கர்வம் கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது. பள்ளிவாசலின் வெளிவராண்டாவை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் கீற்றுகள் மெல்லிய காற்றினூடே தங்களின்  இறுப்பை அவ்வப்போது நிறுவிக்கொண்டு இருந்தன. பகலில் அடித்த வெயிலின் தாக்கம் லேசாக வராண்டாவில் மிச்சமிருந்தாலும் பேச்சுக்களில் வெளிப்பட்ட அனலால் அது பொருட்படுத்தப்படவில்லை அவர்களால். அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்தது நீள்வட்டமாக அமர்ந்திருந்த இளைஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம். “முன்னூறு தலகட்டுக்கும் மேல […]

Read More

ஊற்றுக்கண்

வெல்டன் மை பாய்!    1965-ம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியரிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான சட்டதிட்டங்களுடைய கல்லூரி என்பது அனைவரும் அறிந்த விசயமே. லொயோலா மாணவர்களை “லொயோலாவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆ•ப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது […]

Read More

கருமமே ……..

-(ஷேக் சிந்தா மதார்) அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா. தெருவிளக்குகள்  சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள்  விழுந்துவிட்டார். உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை  மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார். அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி  மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார். திரும்பவும் வீடு […]

Read More